நேபாளத்தில் நடந்த வன்முறை.,பல உயிர்கள் பலி: வேதனை தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி
நேபாளத்தில் நடந்த வன்முறை குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி வேதனை தெரிவித்துள்ளார்.
உச்சகட்ட பதற்றம்
சமூக வலைத்தளங்களின் தடை அறிவிப்பையடுத்து நேபாளத்தில் வெடித்த வன்முறை உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
அந்நாட்டின் முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரித்து கொல்லப்பட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேபாளத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள் இதயத்தை காயப்படுத்தியதாக பதிவிட்டுள்ளார்.
என் இதயத்தை வருத்தப்படுத்துகிறது
அவர், "இன்றைய சுற்றுப்பயணத்தில் இருந்து திரும்பிய பிறகு, பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில், நேபாளத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது. நேபாளத்தில் நடந்த வன்முறை மனதை வேதனைப்படுத்துகிறது.
பல இளைஞர்கள் உயிரிழந்திருப்பது என் இதயத்தை மிகவும் வருத்தப்படுத்துகிறது. நேபாளத்தின் ஸ்திரத்தன்மை, அமைதி மற்றும் செழிப்பு ஆகியவை மிக முக்கியமானவை.
நேபாளத்தில் உள்ள எனது அனைத்து சகோதர சகோதரிகளும் அமைதியையும், ஒழுங்கையும் பராமரிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
आज दिनभरीको भ्रमणबाट फर्किएपछि सुरक्षा सम्बन्धी मन्त्रिपरिषद् समितिको बैठकमा नेपालको घटनाक्रमहरुको बारेमा विस्तृत छलफल भयो । नेपालमा भएको हिंसा हृदयविदारक छ । धेरै युवाहरुले आफ्नो ज्यान गुमाउनु परेकोमा मेरो मन अत्यन्तै विचलित छ । नेपालको स्थिरता, शान्ति र समृद्धि अत्यन्त…
— Narendra Modi (@narendramodi) September 9, 2025
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |