காவல் நிலையத்தில் சிக்கன் கிரேவி சமைத்து சாப்பிட்ட பொலிசார்! நோட்டீஸ் விட்ட ஐ.ஜி
காவல் நிலையத்தில் சிக்கன் கிரேவி சமைத்து சாப்பிட்ட பொலிசாரின் வீடியோ வைரலானதையடுத்து விளக்கம் கேட்டு ஐ.ஜி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
காவல் நிலையத்தில் சிக்கன் சமைத்து சாப்பிட்ட பொலீசார்
பொதுவாக காவல்நிலையத்தில், குற்றவாளிகளை தண்டிப்பதும், அடிப்பதும் என பரபரப்பாக இருப்பதை தான் நாம் சினிமாவில் பார்த்திருப்போம். ஆனால், தற்போது சிக்கன் கிரேவி சமைத்து சாப்பிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்திய மாநிலம் கேரளாவில் இலவம்திட்டா பொலிசார் பத்தனம்திட்டாவில் உள்ள காவல் நிலையத்திற்குள் யூனிபார்ம் அணிந்து சிக்கன் கிரேவியும், மரவள்ளி கிழங்கு கழியும் செய்து சாப்பிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில், பொலிசார் ஒருவர் சிக்கன் கடைக்கு சென்று கறி வாங்குவது முதல், காவல் நிலையம் வந்து வெங்காயம் வெட்டி, இஞ்சி தட்டி சிக்கன் கிரேவி செய்வது போல இருக்கிறது. இதில் முக்கியமானது என்னவென்றால் அவர்கள் ஒருவருக்கொருவர் ஊட்டி பரிமாறிக்கொள்கின்றனர்.
நோட்டீஸ் அனுப்பிய ஐ.ஜி
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, காவல்துறை கண்காணிப்பாளர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும், அனைத்து ஸ்டேஷன் அதிகாரிகளும் நோட்டீஸுக்கு பதில் அளிக்க வேண்டுமென்று கேரள தெற்கு மண்டல ஐ.ஜி கேட்டுக் கொண்டுள்ளார்.
ஒரு சிலர் இந்த வீடியோவை பார்த்துவிட்டு பொலிசாரை பாராட்டியுள்ளனர். இன்னும் சிலர், காவல்துறையில் சமைத்து சாப்பிடுவதற்கு அனுமதி அளித்தது யார் என்றும் கேள்விகளை எழுப்பியுள்ளனர். மேலும், இதை சமூக வலைதளத்தில் பதிவிடுவதற்கான காரணத்தை கூறுமாறும் கேட்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |