போலந்து நாட்டைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் மாயம்: கிரீஸில் குடியேறிகள் 5 பேர் கைது
27 வயதான போலந்து நாட்டை சேர்ந்த ஹோட்டல் தொழிலாளி அனஸ்டாசியா ரூபின்ஸ்கா என்ற இளம்பெண் காணாமல் போயுள்ள சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காணாமல் போன இளம்பெண்
27 வயதான அனஸ்டாசியா ரூபின்ஸ்கா(Anastasia Rubinska) போலந்து நாட்டில் ஹோட்டல் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
அனஸ்டாசியா ரூபின்ஸ்கா கிரீஸ் நாட்டின் கோஸ் தீவில் உள்ள மர்மரி நகரில் திங்கட்கிழமை முதல் காணாமல் போகியுள்ளார்.
27-year-old Anastazja Rubińska disappeared last Monday in the town of Marmari, on the island of Kos in Greece Kos island
— Visegrád 24 (@visegrad24) June 17, 2023
If anyone saw her on the day of the disappearance, please contact the police at +302242024444
Anyone who saw the Bangladeshi suspects should also call
(2/2) pic.twitter.com/TT3B9unbml
சந்தேக நபர்கள் 5 பேர் கைது
இந்நிலையில் அனஸ்டாசியா ரூபின்ஸ்கா காணாமல் போன சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கிரீஸ் பொலிஸார் 5 பங்களாதேஷ் குடியேறிகளை கைது செய்துள்ளனர்.
அத்துடன் அனஸ்டாசியா ரூபின்ஸ்கா காணாமல் போன தினத்தன்று அவரை நேரில் பார்த்தவர்கள் யாரேனும் இருந்தால் பொலிஸாரை +302242024444 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதற்கிடையில் 27 வயது இளம்பெண் அனஸ்டாசியா ரூபின்ஸ்கா காணாமல் போன சம்பவம் ஐரோப்பிய நாடான போலந்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |