பெலராஸ் ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன் மனித கழிவை வீசி எறிந்தவர் மர்ம மரணம்: மனைவி குற்றச்சாட்டு
பெலாரஸ் நாட்டின் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவின் அலுவலகம் முன்பு மனித கழிவுகளை வீசி எறிந்த நபர் மர்மமான முறையில் உயிரிழந்து இருப்பதாக அவரது மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தின் முன் மனித கழிவை வீசிய நபர்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நெருங்கிய நண்பரான பெலராஸ் நாட்டு ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவின் அலுவலகத்தின் முன்பு மனித கழிவை தூக்கி எறிந்த நபர் மர்மமான முறையில் இறந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெலாரஸ் நாட்டு கலைஞரான அலெஸ் புஷ்கின்(57) கடந்த 2021ம் ஆண்டு வெறுப்பை பரப்பியதற்காகவும், அரசு சின்னங்களை சேதப்படுத்தியதற்காகவும் கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெலாரஸ் நாட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார்.
Getty
இதற்கு முன்னதாக 1999ம் ஆண்டு அலெஸ் புஷ்கின் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவின் அலுவலகத்தின் முன்பு மனித கழிவை வீசியதற்காக கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.
மர்ம மரணம்
இந்நிலையில் வெறுப்பு மற்றும் அரசு சின்னங்களை சேதப்படுத்தியதற்காக 2021 ல் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வரும் அலெஸ் புஷ்கின்(57) உயிரிழந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை உறுதிப்படுத்தியுள்ள அவரது மனைவி மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள், அலெஸ் புஷ்கின் மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அலெஸ் புஷ்கினுக்கு எத்தகைய நோய் பாதிப்புகளும் ஏற்படவில்லை என்றும் அவர் எந்தவொரு மருத்துவ நிலைகளும் இல்லை என்றும் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
AP
அப்படி இருக்கையில் அவர் சிறையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் போது உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர் என மனைவி ஜானினா டெமுச் குறிப்பிட்டுள்ளார்.
கார்ட்டூனிஸ்ட் மற்றும் அரசியல் விமர்சகரின் இந்த மரணம் குறித்து பெலாரஸ் வேறு எத்தகைய கருத்துகளும் தெரிவிக்கவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |