மூன்றாம் உலக போருக்கு வழிவகுக்கும்: மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்யா எச்சரிக்கை
உக்ரைன் உதவும் முட்டாள்தனமான முடிவுகள் மூன்றாம் உலக போருக்கு வழிவகுக்கும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நெருங்கிய நண்பரான டிமிட்ரி மெட்வடேவ் எச்சரித்துள்ளார்.
உக்ரைனுக்கு உதவி
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கிட்டத்தட்ட 500 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே மேற்கத்திய நாடுகளிடம் உக்ரைன் கூடுதல் ராணுவ மற்றும் நிதியுதவியை கோரிக்கையை உக்ரைன் முன்வைத்து வருகிறது.
மேலும் மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் உக்ரைனை உறுப்பினராக இணைத்து கொள்ளவும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வலியுறுத்தி வருகிறார்.
Ministry of Defence
இதற்கிடையில் உக்ரைனில் இராணுவ நடவடிக்கையை தொடர்ந்து ஆதரவளிக்க G7 பராமரிப்பு தொகுப்பு வழங்குவது குறித்து பிரித்தானியா அறிக்கை வெளியிட்டது.
அத்துடன் உக்ரைன் போரை விரைவாக முடிக்கவும், போரின் முடிவுக்கு பிறகும் உக்ரைன் பாதுகாப்புக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் வகையிலான கூட்டு ஒப்பந்தத்தில் உறுப்பு நாடுகள் அனைத்தும் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்படும் விஷயங்கள் அறிக்கையில் இடம்பெற்று இருந்ததாக தெரியவந்துள்ளது.
மூன்றாம் உலக போர்
இந்நிலையில் உக்ரைனுக்கான மேற்கத்திய நாடுகளின் முட்டாள்தனமான ஆதரவு மூன்றாம் உலக போருக்கு வழிவகுக்கும் என ரஷ்ய ஜனாதிபதி புடினின் நெருங்கிய நண்பர் டிமிட்ரி மெட்வடேவ் எச்சரித்துள்ளார்.
Getty
மேலும் மேற்குலகம் வேறு எதையும் கண்டுபிடிக்க தவறிவிட்டது, இது ஒரு முட்டுச் சந்தாகும். எல்லாம் நன்றாக தெரிகிறது, ரஷ்யாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கை அதே இலக்குகளுடன் தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதியின் நெருங்கிய நண்பரான டிமிட்ரி மெட்வடேவ் தற்போது ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |