மாஸ்கோ நோக்கி விரைந்த வாக்னர் படை! புடின் தனி விமானத்தில் வெளியேறினாரா?
ரஷ்ய ஆதரவு கூலிப்படையான வாக்னர் அந்நாட்டுக்கு எதிராகவே திரும்பியது உலக நாடுகள் மத்தியில் பரபரப்பை அதிகரித்தது.
உக்ரைன்- ரஷ்யா போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டது வாக்னர் படை, உக்ரைனில் இருந்து ரஷ்யாவுக்குள் நுழைந்த வாக்னர் படை, அந்நாட்டின் முக்கிய நகரை கைப்பற்றியதாக தகவல்கள் வெளியானது.
தொடர்ந்து மாஸ்கோவை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்ததாகவும், ரஷ்யாவில் ஆட்சி மாற்றம் நிச்சயம் எனவும் வாக்னர் படைத்தலைவர் அறிவித்தார்.
இது ஒரு துரோகம், முதுகில் குத்தும் செயல் என ரஷ்ய ஜனாதிபதி புடின் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.
வாக்னர் படையின் முன்னேற்றம், உள்நாட்டு போருக்கு வழிவகுக்கலாம் என பதற்றம் நீடித்துக் கொண்டிருந்த நிலையில், பொலாரஸ் ஜனாதிபதியின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் வாக்னர் படை பின்வாங்கியதாக தெரிகிறது.
இந்நிலையில் வாக்னர் படை மாஸ்கோ நோக்கி விரைந்த போது, புடின் தனி விமானத்தில் சென்று விட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
புடினுக்கான சிறப்பு விமானமான Il-96-300PU விமானம் மாஸ்கோவில் இருந்து, ரஷ்ய நேரப்படி பிற்பகல் 2 மணியளவில் சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
REUTERS
அதாவது, விமானங்களின் பாதையை பின்தொடரும் FlightRadar சேவை தரவுகளை சுட்டிக்காட்டி பலரும் பதிவிட்டனர்.
மேலும் அந்த விமானம் கண்காணிப்பு கட்டமைப்பில் இருந்து மறைந்துவிட்டதாகவும், அதில் புடின் பயணித்தார் என்பதை உறுதியாக கூற இயலாது எனவும் தெரிவித்தனர்.
மாஸ்கோவுக்கு வடமேற்கே வால்டாய் ஏரியில் உள்ள இல்லத்திலேயே புடின் அதிக நேரத்தை செலவிடுவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |