புடின் ஏமாற்றிவிட்டார்... உக்ரைன் போர் விவகாரத்தில் ஜனாதிபதி ட்ரம்ப் ஆதங்கம்
உக்ரைனில் தொடர்ந்து போரை முன்னெடுப்பதன் மூலமாக, விளாடிமிர் புடின் தம்மை ஏமாற்றிவிட்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மிகுந்த நம்பிக்கை
உக்ரைன் போர் மிக விரைவில் முடிவுக்கு வரும் என தாம் நம்புவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பிரித்தானியா பிரதமர் ஸ்டார்மருடன் இணைந்து பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட டொனால்ட் ட்ரம்ப்,
இரு நாடுகளும் முன்னெடுத்த மிகப்பெரிய ஒப்பந்தங்கள் தொடர்பில் பட்டியலிட்டார். இதன் பின்னர் பேசிய ட்ரம்ப், புடின் மீது தமக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது என்றும் குறிப்பிட்டார்.
மேலும், தாம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் 7 பேர்களை முடிவுக்கு கொண்டுவந்ததாகவும், ஆனால் ரஷ்ய போர் மட்டும் உக்கிரமாக நீடித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இது பைடன் காலத்தில் தொடங்கப்பட்ட போர் என மீண்டும் குறிப்பிட்ட ட்ரம்ப், தமது ஆட்சியின் கீழ் இதற்கான வாய்ப்பே உருவாகியிருக்காது என்றார். மேலும், புடினுடனான நெருக்கம் காரணமாக போரை மிக விரைவில் முடிவுக்கு கொண்டுவரலாம் என தாம் கருதியதாகவும்,
முடிவுக்கு வரும்
ஆனால் அது கடினமான பணியாக இருந்தது என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உண்மையில் புடின் தம்மை ஏமாற்றிவிட்டதாக குறிப்பிட்ட ட்ரம்ப், ரஷ்ய - உக்ரைன் விவகாரம் மிக விரைவில் முடிவுக்கு வரும் என்றும், அதுபோலவே காஸா யுத்தமும்.
போர் எப்போதும் கடினமானது என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், நீங்கள் நினைப்பதற்கு நேர்மாறாக விஷயங்கள் நடக்கும் என்றார். உக்ரைன் வீரர்களை விடவும் ரஷ்யர்களே அதிக எண்ணிக்கையில் இறப்பதாக குறிப்பிட்ட ட்ரம்ப், தாம் ஜனாதிபதியாக பொறுப்பில் இருந்திருந்தால், ரஷ்ய போர் உருவாக வாய்ப்பில்லை என்றார்.
ஓவல் அலுவலகத்தில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியிடம் இது மூன்றாம் உலகப் போருக்கு காரணமாக அமையும் என தாம் குறிப்பிட்டதாகவும், ஆனால், அப்படியான ஒரு சம்பவம் நடக்க வாய்ப்பில்ல என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |