இந்த 6 நாடுகளுக்கும் தானியங்கள் இலவசம்: உறுதி அளித்த ரஷ்ய ஜனாதிபதி புடின்
கருங்கடல் தானிய ஒப்பந்தம் முடிவுக்கு வந்த நிலையில், இந்த வாய்ப்பை சாதகமாக பயன்படுத்த முடிவெடுத்துள்ள புடின், ஆறு நாடுகளுக்கு தானியங்களை இலவசமாக வழங்க உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
6 ஆப்பிரிக்க நாடுகளுக்கு
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடந்த ரஷ்யா-ஆப்பிரிக்கா உச்சிமாநாட்டின் முதல் நாளில் பேசிய ஜனாதிபதி விளாடிமிர் புடின், 6 ஆப்பிரிக்க நாடுகளுக்கு தானியங்களை இலவசமாக வழங்க தாங்கள் தயார் என உறுதி அளித்துள்ளார்.
@getty
மேலும், உக்ரைன் தானியங்களுக்கு பதிலாக அந்த நாடுகளுக்கு தாங்கள் தானியங்களை வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மாதங்களில் புர்கினா பாசோ, ஜிம்பாப்வே, மாலி, சோமாலியா, மத்திய ஆப்பிரிக்க குடியரசு மற்றும் எரித்திரியா ஆகிய நாடுகளுக்கு 25,000-50,000 டன் தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என்றார்.
ரஷ்யாவை ஒரு பெரிய சக்தியாக சித்தரிக்கும் நோக்கில் ஆப்பிரிக்க கண்டத்துடன் ரஷ்யா இரண்டு நாள் உச்சி மாநாட்டை நடத்துகிறது. உக்ரைன் நாட்டுடன் இணைந்து கருங்கடல் தானிய ஒப்பந்தம் அமுலில் இருந்து வந்த நிலையில், ஆப்பிரிக்க நாடுகள் உட்பட உலகின் பல்வேறு நாடுகள் போதுமான தானியங்களை பெற்று வந்தது.
@ap
பில்லியன் டொலர்கள் மதிப்புள்ள தானியங்கள்
ஆனால் இந்த மாதம் அந்த ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகுவதாக முடிவெடுத்தது. மட்டுமின்றி, மேற்கத்திய நாடுகளின் தடை காரணமாக, ரஷ்ய விவசாயப் பொருட்களை வெளிநாடுகளில் விற்பனை செய்வதைக் கட்டுப்படுத்தியதாக அவர் கூறினார்.
துருக்கியின் தலையீட்டில் முன்னெடுக்கப்பட்ட கருங்கடல் ஒப்பந்தம் வாயிலாக உக்ரைனில் இருந்து கருங்கடல் வழியாக பில்லியன் கணக்கான டொலர்கள் மதிப்புள்ள தானியங்களை பாதுகாப்பாக கொண்டு செல்ல முடிந்தது.
@getty
இந்த நிலையில், உக்ரைன் தானியங்களை நம்பியிர்ருக்கும் உலகச் சந்தையில் இனி ரஷ்யா ஆதிக்கம் செலுத்தும் வகையில், முதற்கட்டமாக ஆப்பிரிக்க நாடுகளுக்கு தானியங்களை ரஷ்யா இலவசமாக வழங்குகிறது என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |