ரஷ்ய படையை அதிகரிக்க புதிய சட்டத்தை அமுல்படுத்திய புடின்!
ரஷ்யாவின் ஆயுதப்படையில் மேலும் பலரை சேர்க்க ஜனாதிபதி விளாடிமிர் புடின் புதிய சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் நான்காவது மாதமாக தொடர்ந்துவரும் நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் ஆயுதப்படையில் சேரும் புதிய சட்டத்தில் கையெழுத்திட்டார்.
இந்த நடவடிக்கை உக்ரைனில் நடக்கும் போருக்காக மேலும் சிவிலியன் நிபுணர்களை நியமிக்க ரஷ்யாவிற்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்ய இராணுவம் முன்னதாக நிர்ணயித்த தேசிய மற்றும் வெளிநாட்டு இராணுவ ஆட்சேர்ப்புகளுக்கான வயது வரம்பு என்பது, ரஷ்யர்களுக்கான வரம்பு 18-40 ஆண்டுகள் மற்றும் வெளிநாட்டினருக்கான வரம்பு 18-30 ஆண்டுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புடின் இன்னும் 3 ஆண்டுகள் தான் உயிரோடு இருப்பார்! ரஷ்ய உளவாளி பரபரப்பு தகவல்
இந்த வாரம் ரஷ்யாவின் பாராளுமன்றம் இராணுவத்தில் சேரும் நபர்களுக்கான உயர் வயது வரம்பை ரத்து செய்யும் சட்டத்தை நிறைவேற்றியது.
அதிகளவான மருத்துவ நிபுணர்கள், பொறியியலாளர்கள் மற்றும் தகவல் தொடர்பு நிபுணர்கள் உட்பட அதிக தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டுவருவதற்கான ஒரு வழியாக ரஷ்யா இந்த சட்டத்தை முன்வைக்கிறது.
உக்ரேனிய மற்றும் மேற்கத்திய இராணுவ நிபுணர்களின் கூற்றுப்படி, போரில் ரஷ்யா சுமார் 30,000 வீரர்களின் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. கடந்த அதிகாரப்பூர்வ ரஷ்ய அறிக்கைகள் மார்ச் 25 அன்று மொத்தம் 1,351 பேர் இறந்ததாகக் கூறியது, அதன் பிறகு அந்த எண்ணிக்கை புதுப்பிக்கப்படவில்லை.
இதையும் படிங்க: பிரபல பாடகர் சுட்டுக்கொலை! நான் தான் கொன்றேன் என கூறிய கனடாவை சேர்ந்த தாதா
ஜனாதிபதி புடின் உக்ரைனில் போருக்காக பெரிய அளவிலான ஆட்சேர்ப்பைத் தவிர்த்தார், இருப்பினும், கட்டாயமாக இராணுவத்தில் சேர்க்கப்பட்ட சிலர் மோதலில் ஈடுபட்டதாக மார்ச் மாதம் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புக்கொண்டது, மேலும் சிலர் உக்ரேனியப் படைகளால் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.
எவ்வாறாயினும், பொதுமக்களை இராணுவத்தில் சேர்த்து அவர்களை போருக்கு அனுப்புவது நாட்டின் அதிகாரப்பூர்வ கொள்கையல்ல என ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம், உக்ரைனில் போர் தொடருவதற்கான அறிகுறியாக "இலக்குகள்" அடையப்படும் வரை அதன் "சிறப்பு இராணுவ நடவடிக்கை" தொடரும் என்று கூறியது.