தப்பியோடத் தயாராகும் புடின்?: ஏற்பாடுகள் துவங்கியதற்கான ஆதாரம் வெளியானது
உக்ரைன் போரால் ஏராளம் எதிரிகளை சம்பாதித்துள்ள ரஷ்ய ஜனாதிபதி புடின், ஒருவேளை தனது ஆட்சிக் கவிழ்க்கப்படுமானால் என்ன செய்வது என்பது குறித்து தீவிரமாக திட்டமிடத் துவங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்பிரிக்க நாடு ஒன்றிற்குத் தப்பியோடத் திட்டம்
தான் தப்பியோடவேண்டிவருமானால், என்ன செய்வது என திட்டமிட்டுவரும் புடின், ஆப்பிரிக்க நாடு ஒன்றிற்குத் தப்பிச் செல்வதற்கான ஏற்பாடுகளைத் துவங்கியுள்ளாராம்.
அவர், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு என்னும் நாட்டுக்குத் தப்பிச் செல்லலாம் என கருதப்படுகிறது.
Image: Kremlin.ru /east2west news
12.5 பில்லியன் பவுண்டுகள் பூமிக்கடியிலுள்ள கிடங்குகளில் பதுக்கல்
தப்பிச் செல்லும் திட்டத்தின் தொடர்ச்சியாக, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில், பூமிக்கடியிலுள்ள கிடங்குகளில் புடினுக்குச் சொந்தமான சுமார் 12.5 பில்லியன் பவுண்டுகள் பணமும் தங்கமும் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த பணத்தை புடினுடைய விசுவாசிகளான, வாக்னர் நிறுவனம் (Wagner private military company) என்னும் கூலிப்படை பாதுகாத்துவருகிறதாம்.
image: Kremlin.ru /east2west news
பாலியில் G-20 மாநாட்டுக்காக தலைவர்கள் சென்றுள்ள நிலையில், அங்கு செல்லாத புடின், அதற்கு பதிலாக மத்திய ஆப்பிரிக்கக் குடியரசுக்குச் சென்றுள்ளார். அந்நாட்டின் ஜனாதிபதியான Faustin Archange Touadéraவை புடின் சந்தித்துள்ள நிலையில், இருதரப்பு அரசியல், வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக இருவரும் பேச்சுவார்த்தைகள் நடத்தியதாக ரஷ்ய அரசின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
ஆனால், உண்மையில் அந்நாட்டின் தலைவர் தனக்கு விசுவாசமாக இருப்பாரா என்பதை உறுதி செய்வதற்காகவே புடின் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசுக்குச் சென்றுள்ளதாக General SVR டெலிகிராம் சேனல் தெரிவித்துள்ளது.
ஆனால், உண்மையில் அந்நாட்டின் தலைவர் தனக்கு விசுவாசமாக இருப்பாரா என்பதை உறுதி செய்வதற்காகவே புடின் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசுக்குச் சென்றுள்ளதாக General SVR டெலிகிராம் சேனல் தெரிவித்துள்ளது.
Image: Kremlin.ru /east2west news