இந்த இரவில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்... புடினின் திட்டம் குறித்து அம்பலப்படுத்திய உக்ரைன்
உக்ரைனின் Zaporizhzhia அணுமின் நிலையத்தை தகர்க்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ரகசிய உத்தரவிட்டுள்ளதாக வதந்தி பரவி வருகிறது.
வெளியேற அவசர எச்சரிக்கை
ரஷ்ய ஊழியர்களும் ராணுவத்தினரும் உடனடியாக அங்கிருந்து வெளியேற அவசர எச்சரிக்கை வெளியான நிலையிலேயே தொடர்புடைய வதந்தி பரவியுள்ளது.
@getty
Zaporizhzhia அணுமின் நிலையம் தொடர்பில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, கடந்த சனிக்கிழமையே எச்சரிக்கை விடுத்துள்ளார். அந்த அணுமின் நிலையத்தை தகர்க்க ஏற்கனவே தயாராகிவிட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் உக்ரைன் உளவுத்துறை கூறும் தகவலில், ஆலையைச் சுற்றி வெடிமருந்துகள் வைக்கப்பட்ட பின்னர் ஜூலை 5 அன்று ஒரே இரவில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
ரஷ்ய தலைமை ஒப்புதல்
ககோவ்கா அணை சேதப்படுத்தியுள்ள நிலையில், தாக்குதலுக்கான வாய்ப்புகள் அதிகம் என்றே வாஷிங்டன் போஸ்ட் எச்சரித்துள்ளது. ஜூன் தொடக்கத்தில் ககோவ்கா அணையில் ஏற்பட்ட சேதம் ஆலையின் அணு உலைகளை குளிர்விப்பதற்கும் எரிபொருளைச் செலவழிப்பதற்கும் தேவையான நீரின் விநியோகத்தை பாதித்தது.
@getty
அணுமின் நிலையத்தில் தாக்குதல் முன்னெடுக்கும் திட்டத்திற்கு ரஷ்ய தலைமையிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டதாகவே கூறுகின்றனர். அணுக்கசிவை ஏற்படுத்துவதன் மூலமாக ரஷ்யா ஒரு பயங்கரவாத தாக்குதலை முன்னெடுக்க இருக்கிறது என ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |