மாட்சிமை வெற்றி பெற வேண்டும்: மன்னர் மூன்றாம் சார்லஸ்-க்கு புடின் வாழ்த்து
பிரித்தானியாவின் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு புடின் வாழ்த்து.
மாட்சிமை வெற்றி, நல்ல ஆரோக்கியம் மற்றும் அனைத்து நல்வாழ்த்துக்கள் என புடின் வாழ்த்து.
பிரித்தானியாவின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் அரியணை ஏறியதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் மகாராணி இரண்டாம் எலிசபெத் ஸ்கொட்லாந்தில் உள்ள பால்மோரல் மாளிகையில் வியாழக்கிழமை உயிரிழந்ததை தொடர்ந்து, பிரித்தானியாவின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் பதவியேற்றுக் கொண்டார்.
Image: @RussianEmbassy/Twitter
இந்நிலையில் பிரித்தானிய மகாராணி மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய நபர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
மேலும் ராணியாரின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க அமெரிக்க ஜனாதிபதி தயாராக இருப்பதாகவும், ஆனால் உறுதியாக தெரியவில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்து இருந்தார்.
ஆனால் பிரித்தானிய மகாராணி மறைவிற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரங்கல் செய்தி மட்டும் அனுப்பி இருப்பதாகவும், இறுதிச் சடங்கில் பங்கேற்க வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
Image: Getty Images
இந்நிலையில் பிரித்தானியாவின் புதிய மன்னராக பதவியேற்றுள்ள மூன்றாம் சார்லஸுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார், என்று லண்டனில் உள்ள ரஷ்ய தூதரகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: பாகிஸ்தானுக்கு பாரிய நிதி உதவி தேவை: வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட ஐ நா பொது செயலாளர் கருத்து
அத்துடன் புடினின் வாழ்த்தில், நீங்கள் மன்னராக அரியணை ஏறுவதற்கு எனது வாழ்த்தை ஏற்றுக் கொள்ளுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் உங்கள் மாட்சிமை வெற்றி, நல்ல ஆரோக்கியம் மற்றும் அனைத்து நல்வாழ்த்துக்களையும் விரும்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.