சீனாவிலிருந்து வருவபவர்களுக்கு புதிய தடை: கத்தார் உட்பட பல நாடுகள் அறிவிப்பு
சீனாவிலிருந்து வரும் பயணிகளிடமிருந்து கோவிட் நெகட்டிவ் சோதனை தேவைப்படும் நாடுகளின் பட்டியலில் கத்தார் இணைந்துள்ளது.
பயணிகள் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் கோவிட் சோதனை முடிவைச் சமர்ப்பிக்க வேண்டும்.
தடுப்பூசி நிலையைப் பொருட்படுத்தாமல் கோவிட் பரிசோதனை கட்டாயம் என்று கத்தாரின் மாநில செய்தி நிறுவனமான QNA திங்களன்று தெரிவித்துள்ளது. கத்தாரில் இந்த நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 3) முதல் அமுலுக்கு வரும்.
இத்தகைய நடவடிக்கையை விதித்த முதல் வளைகுடா நாடு கத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Reuters
மற்ற நாடுகள்
கத்தாருக்கு முன், பல நாடுகள் சீனாவில் இருந்து பயணிப்பவர்கள் மீது புதிய கோவிட் தடைகளை விதித்துள்ளன
அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, கனடா, இஸ்ரேல், ஜப்பான், தென் கொரியா, மொராக்கோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், ஸ்வீடன் ஆகிய நாடுகள், சீனாவிலிருந்து வருவபவர்களுக்கு இந்த கோவிட் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.
அதே நேரத்தில் மொராக்கோ ஒரு படி மேலே சென்று சீனாவிலிருந்து அனைத்து பயணிகளின் நுழைவை முற்றிலும் தடை செய்தது.