தெருவில் நின்று வெள்ளிப் பொருட்களை விற்ற நபர் - தற்போது பல கோடிக்கு அதிபதியானது எப்படி?
சில சமயங்களில் மக்கள் அனைவரும் எளிய பின்னணியில் இருந்து வரும் நபர்களின் வாழ்க்கையை பற்றி ஆராய்வதில் அதிக ஈடுபாட்டுடன் இருப்பார்கள்.
அந்தவகையில் ஒரு எளிய குஜராத்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தங்க வியாபாரியின் வாழ்க்கை பயணத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
யார் அந்த நபர்?
ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் என்ற நகைக்கடை நிறுவனத்தின் உரிமையாளரும் நிர்வாகத் தலைவருமான ராஜேஷ் மேத்தா தான் அந்த நபர்.
அவர் ரூ.10000 இல் தனது தொழிலை ஆரம்பித்து தற்போது ரூ.9200 கோடி மதிப்பிலான நிறுவனத்தை வைத்திருக்கிறார்.
சர்வதேச தங்க சந்தையில் ராஜேஷ் மேத்தாவுக்கு செல்வாக்கு அதிகம்.
உலகின் மிகப்பெரிய தங்க தொழிற்சாலையின் உரிமையாளராக கருதப்படுபவர் ராஜேஷ் மேத்தா.
ராஜேஷ் மேத்தா பெங்களூருவில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் அவர் தனது தந்தை ஜஸ்வந்த்ராய் மேத்தாவுடன் நகை வியாபாரத்தில் சேர்ந்தார்.
செய்துக் கொண்டிருக்கும் தொழிலை மேலும் விரிவுப்படுத்துவதற்காக ராஜேஷ் மேத்தா வங்கியில் இருந்து ரூ. 8,000 கடனும் சகோதரரிடம் இருந்து ரூ.2,000 வாங்கினார்.
ஆரம்பத்தில் சென்னையில் இருந்து நகைகளை வாங்கி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் விற்பதில் கவனம் செலுத்தினார்.
வெள்ளி நகை வணிகம் வெற்றிகரமாக மாறியது. ராஜேஷ் மேத்தா 1989 இல் தங்க நகைகளுக்கு மாறினார். அவர் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை நிறுவினார்.
அவர் ஓர் உற்பத்தி நிறுவனத்தை ஆரம்பித்து, இங்கிலாந்து, துபாய், ஓமன், குவைத், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு தங்க நகைகளை ஏற்றுமதி செய்தார்.
பின்னர் ராஜேஷ் மேத்தா ‘Shubh Jewellers’ என்ற பெயரில் ஒரு தனி சில்லறை விற்பனைக் கடையைத் தொடங்கினார். கர்நாடகாவில் 81 கடைகள் உள்ளன.
இதையடுத்து 2015 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய தங்க சுத்திகரிப்பு நிலையமான வால்காம்பியை (Valcambi) வாங்கினார்.
இது ஒவ்வொரு ஆண்டும் 400 டன் சிறிய அளவிலான தங்கக் கட்டிகள் மற்றும் 500 டன் கிலோ பார்களை உற்பத்தி செய்யும்.
இவ்வாறு பல உத்திகளை பயன்படுத்தி வியாபாரத்தை உயர்த்தி சென்றவர், தற்போது பல கோடி சொத்து உரிமையாளராக இருக்கிறார்.
சொத்து மதிப்பு?
ராஜேஷ் மேத்தாவின் நிறுவனமான ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது, அதன் சந்தை மூலதனம் 9200 கோடிகள் என்று கூறப்படுகிறது.
சுவிட்சர்லாந்து மற்றும் இந்தியாவில் உள்ள தங்க சுத்திகரிப்பு நிலையங்களைத் தவிர, அவர் பல நகைக் கடைகளையும் வைத்திருக்கிறார்.
2021 ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.2.58 லட்சம் கோடியாக இருந்தது.
தற்போது ராஜேஷ் மேத்தாவின் நிகர மதிப்பு ரூ.13091 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |