கெர்சனை தொடர்ந்து அடுத்த வெற்றியை நெருங்கும் உக்ரைன் துருப்புகள்: ரஷ்யாவுக்கு இன்னொரு அடி
ரஷ்ய துருப்புகள் வசமிருக்கும் டினிப்ரோ ஆற்றின் மேற்குக் கரையை கைப்பற்றும் கடைசி கட்டத்தில் இருப்பதாக உக்ரைன் துருப்புகள் அறிவித்துள்ளன.
கெர்சன் பகுதியில் இருந்து ரஷ்ய துருப்புகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட நிலையில், உக்ரைன் அடுத்த வெற்றியை நெருங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
@Shutterstock
கெர்சனில் உக்ரேனிய கொடி
கெர்சன் பிராந்திய கவுன்சில் தலைவர் தெரிவிக்கையில், நீண்ட பல மாதங்களுக்கு பிறகு கெர்சனில் உக்ரேனிய கொடி பறக்கவிடப்பட்டிருக்கிறது. ரஷ்ய துருப்புகள் வெளியேறிய பின்னர், பிராந்தியத்திற்குள் நுழைந்த உக்ரைன் ராணுவம் மகிழ்ச்சி ஆரவாரம் செய்துள்ளனர்.
@Shutterstock
இதனிடையே, ரஷ்ய வீரர்கள் பலர் அச்சம் காரணமாக பொதுமக்களுக்கான உடையில் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பல எண்ணிக்கையிலான வீரர்கள் என்றே கூறப்படுகிறது.
பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம்
மேலும், நகரை மொத்தமாக ஆய்வுக்கு உட்படுத்தும் வரையில் பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய வீரர்கள் மொத்தமாக வெளியேற இரண்டு வார காலமாகலாம் எனவும், அவர்கள் பொதுமக்களுக்கான உடையில் செல்கின்றனர் எனவும் அதிகாரிகள் தரப்பிலும் கூறப்பட்டுள்ளது.
@Shutterstock
மட்டுமின்றி, டினிப்ரோ ஆற்றில் மூழ்கி பல எண்ணிக்கையிலான ரஷ்ய வீரர்கள் மரணமடைந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
ஆனால், ரஷ்யா தரப்பில் இந்த தகவலை உறுதி செய்யவில்லை என்பது மட்டுமின்றி, வெள்ளிக்கிழமையே, மொத்த ரஷ்ய துருப்புகளும் கெர்சன் பகுதியில் இருந்து வெளியேறியுள்ளதாகவே ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.