ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலியான சோகம்! குளிர்சாதனப் பெட்டியால் நேர்ந்த கதி
பாகிஸ்தானில் குளிர்சாதனப்பெட்டி வெடித்துச் சிதறிய விபத்தில், கைக்குழந்தை உட்பட 10 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பயங்கர சத்தத்துடன் வெடித்த குளிர்சாதனப்பெட்டி
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள நூர் மெகல்லா பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நள்ளிரவு வேளையில் பெரும் வெடிச்சத்தம் கேட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து வீடு முழுவதும் தீப்பற்றியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்க போராடினர்.
ஒருவழியாக தீ கட்டுக்குள் வந்த நிலையில், வீட்டில் இருந்த மக்கள் பிணங்களாக மீட்கப்பட்டனர். கைக்குழந்தை உட்பட 10 பேர் பலியானது பின்னர் தெரிய வந்தது.
YouTube/Geo News
பொலிஸார் விசாரணை
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் நடத்திய விசாரணையில், குளிர்சாதனப்பெட்டியின் கம்ப்ரசர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.
பொலிஸார் விபத்து கூறுகையில், 'நள்ளிரவில் வீட்டில் திடீரென மின்கசிவு ஏற்பட்டுள்ளது. குளிர்சாதனைப் பெட்டி வெடித்துச் சிதறியதில் வீடு தீப்பிடித்து கரும்புகை வெளியானது.
புகையை சுவாசித்ததால் குடும்ப உறுப்பினர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளனர். மேலும், கண்ணிமைக்கும் நேரத்தில் வீடு முழுவதும் தீ பரவியதில் உள்ளே இருந்த 7 மாத குழந்தை, 5 சிறுவர்கள் உட்பட 10 பேரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்' என தெரிவித்துள்ளனர்.
Getty Images/iStockphoto
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |