மரணத்தை நேரில் கண்டோம்... கிரீஸ் நாட்டில் இருந்து தப்பிய பிரித்தானியர்கள் வெளிப்படை
கிரேக்கத்தில் வெப்ப அலை காரணமாக பற்றியெரியும் காட்டுத்தீ நடுவே சிக்கிக்கொண்ட பிரித்தானியர்கள் தற்போது தங்கள் அனுபவங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
கொழுந்துவிட்டெரியும் நெருப்பின் சத்தம்
கிரேக்கத்தின் ரோட்ஸ் தீவு காட்டுத்தீயால் மொத்தமாக சூழப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ரோட்ஸ் தீவில் காட்டுத்தீ நடுவே சிக்கிக்கொண்ட பிரித்தானிய சுற்றுலா பயணிகள், மூன்று மணி நேரம் திகிலை அனுபவித்ததாக கூறுகின்றனர்.
@mirror
கிரீஸ் ராணுவம் தங்களை காப்பாற்றும் முன்னர், கொழுந்துவிட்டெரியும் நெருப்பின் சத்தம் தங்களால் கேட்க முடிந்தது என தெரிவித்துள்ளனர். மரணம் தங்களை நெருங்கி விட்டடதாகவே பலர் எண்ணியதாக குறிப்பிடுகின்றனர்.
ஆயிரக்கணக்கானோர் ரோட்ஸ் தீவில் இருந்து படகுகளில் தப்பியதாக கூறுகின்றனர். கேன்டர்பரி பகுதியை சேர்ந்த தம்பதி, ரோட்ஸ் தீவில் படகு சவாரிக்கு சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் ஒருகட்டத்தில் சிக்கிக்கொள்ள, படகில் இருந்து பார்க்கும் போது தங்கள் ஹொட்டலை நெருப்பு சூழ்ந்துள்ளதாகவும், உயிருக்கு பயந்து அங்கிருந்து தப்பியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
போதிய தகவல்களை அளிக்கவில்லை
கிரீஸ் நாட்டில் சிக்கியிருந்த பிரித்தானியர்கள் திங்கட்கிழமை நாட்டுக்கு திரும்பியுள்ளனர். பயண ஏற்பாட்டாளர்கள் தங்களுக்கு போதிய தகவல்களை அளிக்கவில்லை என்றே பெரும்பாலானோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
@getty
இதனிடையே, Jet2 விமான சேவை நிறுவனம் ரோட்ஸ் தீவில் சிக்கியுள்ள பிரித்தானியர்களை மீட்கும் பொருட்டு மூன்று சேவைகளை முன்னெடுக்க முடிவு செய்துள்ளது. இதனால் திங்கட்கிழமை மாலை மான்செஸ்டர், லீட்ஸ் பிராட்ஃபோர்ட் மற்றும் பர்மிங்காமிற்கு நூற்றுக்கணக்கான மக்கள் வந்திறங்கியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |