எரிமலை வெடிப்பாக தகிக்கும் நகரம்... ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
கிரேக்கத்தின் ரோட்ஸ் தீவில் காட்டுத்தீ மொத்தமாக சூழ்ந்துள்ள நிலையில், குடியிருப்புகள் மற்றும் ஹொட்டல்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
3,500 பேர்கள் வெளியேற்றம்
தற்போதைய சூழலில் நெருப்பை கட்டுப்படுத்துவது என்பது மிகக் கடுமையான ஒன்று என்றே கிரேக்கத்தின் தீயணைப்புத்துறை வெளிப்படையாக தெரிவித்துள்ளது.
@reuters
ரோட்ஸ் தீவில் இருந்து இதுவரை சாலை ஊடாகவும் கடல் மார்க்கமாகவும் 3,500 பேர்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஐரோப்பா முழுவதும் கடுமையான வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலத்த காற்றும் காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதில் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.
இதுவரை 5 ஹெலிகொப்டர்கள் மற்றும் 173 தீயணைப்பு வீரர்களை ரோட்ஸ் தீவில் களமிறக்கியுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கிச்செல்லும் மூன்று ஹொட்டல்கள் மொத்தமாக சேதமடைந்துள்ளது.
50 ஆண்டுகளில் இல்லாத வெப்பம்
Laerma, Lardos மற்றும் Asklipio ஆகிய பகுதிகள் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் அனைவரும் ஹொட்டல்களில் இருந்து வெளியேற்றப்பட்டு, படகுகள் மூலமாக பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
@bbc
கிரேக்கத்தில் வெப்பநிலை 45C வரையில் செல்ல வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர். மட்டுமின்றி, கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வெப்பம் வார இறுதியில் பதிவானதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரோட்ஸ் தீவானது எரிமலை வெடிப்பு போன்று தகிப்பதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |