பெரியார் தொடங்கி விஜயகாந்த் வரை: டிசம்பரில் காலமான தமிழக அரசியல் ஆளுமைகள்
கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக 2023 டிசம்பர் 28ம் திகதியான இன்று உயிரிழந்துள்ள நிலையில், இதே டிசம்பர் மாதத்தில் திரையுலகம் மற்றும் தமிழக அரசியலில் ஆளுமை செலுத்தியவர்கள் குறித்து பார்ப்போம்.
மண்ணுலகை விட்டு பிரிந்த விஜயகாந்த்
சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக இன்று காலை 6:10 மணியளவில் காலமானார்.
விஜயகாந்த் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக அரசியல் மற்றும் திரைத்துறையில் ஆளுமை செய்த பலர் இதே டிசம்பர் மாதத்தில் இயற்கை எய்தி தமிழக மக்களை சோகத்தில் உலுக்கியுள்ளனர்.
அந்த வரிசையில், பெரியார், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சோ அகியோரை தொடர்ந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் டிசம்பர் மாதத்தில் இயற்கை எய்தியுள்ளார்.
பெரியார்
நேரடி தமிழக அரசியலில் பெரியார் இறங்கா விட்டாலும், இன்று வரை தமிழகம் மட்டும் இன்றி ஒட்டுமொத்த இந்திய அரசியலிலும் பெரும் தாக்கத்தை பெரியார் ஏற்படுத்தி வருகிறார்.
1973 டிசம்பர் 24ம் திகதி பெரியார்(Periyar E.V.Ramasamy ) இயற்கை எய்தி தமிழக மக்களை துயரில் ஆழ்த்தினார்.
எம்.ஜி.ஆர்
மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், புரட்சி தலைவர் என பல பட்டங்களுடன் மக்களால் அழைக்கப்பட்டு வந்த எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள், தமிழ் திரையுலகம் மற்றும் தமிழக அரசியலில் உச்சம் தொட்டவர்.
இவர் 1984ம் ஆண்டு டிசம்பர் 24ம் திகதி உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.
ஜெயலலிதா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்ததுடன், எம்.ஜி.ஆர் அவர்களை பின் தொடர்ந்து அரசியலிலும் பெரும் ஆளுமையாக அவதாரம் எடுத்தார்.
அதிமுகவின் பொதுச் செயலாளராகவும், தமிழக முதலமைச்சராகவும் பதவி வகித்தார்.
முதலமைச்சராக இருக்கும் போதே 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி ஜெயலலிதா உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார்.
சோ
தமிழ் திரையுலகின் நகைச்சுவை நட்சத்திரமாக கோலோச்சிய சோ ராமசாமி. தமிழக அரசியலை நுணுக்கமாக விமர்சித்தவர், அத்துடன் முதல்வர் ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்தவர்.
இந்திய பிரதமர் மோடியால் சாணக்கியர் என்றும் ராஜ குரு என்றும் வர்ணிக்கப்பட்டவர் சோ.
இவர் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 7ம் திகதி உடல் நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
M.G. Ramachandran, J Jayalalithaa, Periyar E. V. Ramasamy, cho ramaswamy, Captain Vijayakanth, DMK, ADMK, DMDK