குதிக்கும் அரிசி விலைகள்... தேர்தல் பயத்தில் ஆசிய நாடொன்றின் பிரதமர்
அதிகரிக்கும் அரிசி விலைகள் காரணமாக, தேர்தலுக்கு சில வாரங்களே எஞ்சியுள்ள நிலையில் மக்களின் கோபத்திற்கு இலக்காகியுள்ளார் ஜப்பான் பிரதமர்.
மக்கள் ஆதரவு
ஜப்பானிய பிரதான உணவின் விலையைக் குறைக்கும் முயற்சிகள் சிறிதளவு பலனையே அளித்துள்ளது. ஆனால், விலைவாசி உயர்வு நெருக்கடியைக் குறைக்க நுகர்வு (விற்பனை) வரியைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளைத் தூண்டியுள்ளது.
இந்த நிலையில், Kyodo செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் வீட்டு செலவீனங்கள் அதிகரித்து வரும் அழுத்தத்திற்கு பிரதமர் ஷிகெரு இஷிபாவின் நிர்வாகத்தின் முடிவுகளே காரணம் என நுகர்வோர் குற்றம் சாட்டியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
பிரதமர் ஷிகெரு இஷிபாவின் நிர்வாகத்தின் மீதான மக்கள் ஆதரவு 27.4 சதவீதம் என்றே பதிவாகியுள்ளது. கடந்த அக்டோபரில் அவர் பதவிக்கு வந்ததன் பின்னர் இது மிகக் குறைவான ஆதரவு நிலை என்றும், கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் 5 சதவீதம் குறைவு என்றும் Kyodo செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
மட்டுமின்றி, பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட முக்கால்வாசி பேர், பல்வேறு வகையான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு விதிக்கப்படும் வரி, உணவுப் பொருட்களுக்கு மட்டுமே, அனைத்துப் பொருட்களுக்கும் குறைக்கப்பட வேண்டும் அல்லது முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
அரிதான நடவடிக்கை
ஆனால் பிரதமர் இஷிபாவின் கவலைக்கு காரணமான ஒன்று, பதிலளித்தவர்களில் 87% க்கும் அதிகமானோர் அரிசி விலையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுத்த முயற்சிகள் போதுமானதாக இல்லை என்று கூறியுள்ளனர்.
மேலும், அமெரிக்க-ஜப்பான் வரிவிதிப்பு பேச்சுவார்த்தைகள் - அரிசி மற்றும் பிற உணவுப் பொருட்களின் அமெரிக்க இறக்குமதிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் உட்பட - ஜப்பானுக்கு சாதகமாக முடிவடையும் என்று 74% க்கும் அதிகமானோர் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளனர்.
மே 4 ஆம் திகதி வரையிலான வாரத்தில், பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் அரிசியின் விலை 5 கிலோவிற்கு சராசரியாக ¥4,214 ($29) ஆக இருந்தது. இருப்பினும் முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் ¥18 மலிவாக இருந்தாலும், கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 29 டொலர் என்பது இருமடங்கு என்றே குறிப்பிடுகின்றனர்.
மார்ச் மாதம் அரிதான நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்த இஷிபா அரசாங்கம், கிடங்குகளில் சேமிக்கப்பட்டிருந்த அரிசியை விநியோகம் செய்ய அனுமதித்தது.
பொதுவாக இயற்கை பேரழிவுகள் மற்றும் பயிர் தோல்விகளால் ஏற்படும் பற்றாக்குறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த அரிசி விநியோகம் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |