உக்ரைன் மீது 2வது நாள் இரவாக வான் தாக்குதல்: ரஷ்ய படைகள் முன்னேற்றம்
உக்ரைன் மீது தொடர்ந்து இரண்டாவது நாளாக ரஷ்யா வான் தாக்குதலை அரங்கேற்றி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது நாளாக வான் தாக்குதல்
உக்ரைனில் ஒடேசாவின் தெற்கு துறைமுக பகுதியில் ரஷ்யா இரண்டாவது நாள் இரவாக வான் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, ரஷ்யாவின் தாக்குதலை தடுக்க புதன்கிழமை அதிகாலை முதல் உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்பாட்டில் முழு வீச்சில் நிறுத்தப்பட்டன.
செவ்வாய்க்கிழமையான நேற்று உக்ரைன் துறைமுகத்தை ரஷ்ய படைகள் தாக்கினர், இந்த தாக்குதல் கருங்கடல் வழியாக உக்ரைனிய தானியங்களை ஏற்றுமதி செய்யும் ஐ.நாவின் உணவு தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா வெளிவந்ததை தொடர்ந்து நடைபெற்றுள்ளது.
Reuters
ரஷ்யாவின் இந்த முடிவு ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் உணவு பொருட்கள் விலை அதிகரிப்பு மற்றும் பசியை அதிகரிக்க செய்யும் அபாயத்தை அதிகரிக்க செய்துள்ளது.
ரஷ்யாவின் வான் தாக்குதலுக்கு மத்தியில், பொதுமக்கள் யாரும் ஜன்னல் பக்கம் நெருங்க வேண்டாம், எதிரிகளின் இலக்கை நோக்கி சுட வேண்டாம் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை காட்ட வேண்டாம் என ஓடேசா மாகாண கவர்னர் ஓலே கிப்பர் டெலிகிராமில் தெரிவித்துள்ளார்.
Reuters
முன்னேறும் படைகள்
6 வார காலங்களாக உக்ரைன் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷ்ய நிலைகளை எதிர்த்து எதிர்ப்பு தாக்குதலை தீவிரமாக நடத்தி வருகிறது.
இதற்கிடையில், ரஷ்ய படைகள் குபியன்ஸ்க் திசையை நோக்கி 2 கி.மீ முன்னேறி இருப்பதாகவும், இது வடகிழக்கு கார்கிவ் பகுதியின் முக்கிய ரயில் சந்திப்பை உள்ளடக்கியுள்ளது என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Reuters
ஆனால் ரஷ்யா குறிப்பிட்டுள்ள பகுதிகள் உக்ரைனிய படைகளுக்கு மாறி இருப்பதாக உக்ரைனிய துணை பாதுகாப்பு மந்திரி ஹன்னா மாலியர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |