நள்ளிரவில் உக்ரைன் மீது தாக்குதல்: பதிலடிக்கு அனுப்பிய 28 ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா
கிரிமியா நோக்கி ஏவப்பட்ட 28 உக்ரைனிய ட்ரோன்களை ரஷ்யா சுட்டு வீழ்த்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைன்
ட்ரோன் உக்ரைன் ரஷ்யா டையிலான போர் நடவடிக்கையின் சமீபத்தில் திங்கட்கிழமை அதிகாலை கிரிமியாவின் பாலத்தை உக்ரைனின் கடல் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தின.
இதனால் கிரிமியா பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது, மேலும் தாக்குதலின் போது பாலத்தில் பயணித்த கார் ஒன்று பலத்த சேதமடைந்தது, இதில் காரில் இருந்த தம்பதியர் பலியாகினர், அவர்களது 14 வயது சிறுமி படுகாயங்களுடன் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
⚡️??Russian media publish a video of the destruction of "one of the water drones of the Armed Forces of ??Ukraine on June 16 in Sevastopol"
— ??Ukrainian Front (@front_ukrainian) July 17, 2023
Russians assume that just such a drone could cause significant damage to the Crimean bridge. pic.twitter.com/CHeOHoBgaG
இந்நிலையில் கிரிமியாவை நோக்கி ஏவப்பட்ட 28 உக்ரைனிய ட்ரோன்களை ரஷ்யாவின் வான் தடுப்பு மற்றும் எலக்ட்ரானிக் கவுண்டர் செயல்பாட்டு அமைப்புகள் இணைந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை சுட்டு வீழ்த்தி இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் முன்னெடுத்த இந்த ட்ரோன் தாக்குதலில் எத்தகைய உயிரிழப்புகளும், பாதிப்புகளும் ஏற்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
Ukraine has attacked the Crimean Bridge with naval drones and managed to destroy are large section of the bridge.
— Visegrád 24 (@visegrad24) July 17, 2023
Excellent news for the counteroffensive! pic.twitter.com/DPOl3SnHGR
தாக்குதல் நடத்திய ரஷ்யா
இதனிடையே இரவோடு இரவாக உக்ரைனின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ட்ரோன் மற்றும் கப்பல் ஏவுகணை கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப்படை செவ்வாய்க்கிழமை அதிகாலை குற்றம்சாட்டி இருந்தது.
இதனால் திங்கட்கிழமை நள்ளிரவில் மைக்கோலைவ் துறைமுகத்தில் உள்ள வசதிகளில் தீ பற்றியதாக அந்த நகரின் மேயர் தெரிவித்து இருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |