உக்ரைன் தானியங்கள் வேண்டாம்... நாங்கள் இருக்கிறோம்: முக்கிய நாடுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி அறிவிப்பு
ஆப்பிரிக்க நாடுகளுக்கு தானிய ஏற்றுமதி செய்ய நாங்கள் இருக்கிறோம், இனி உக்ரைன் தானியங்களை நம்ப வேண்டாம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்படுவது ஆப்பிரிக்க மக்கள்
உக்ரைன் தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா வலுக்கட்டாயமாக வெளியேறிய நிலையில், அதனால் கடுமையாக பாதிக்கப்படுவது ஆப்பிரிக்க மக்கள் என்றே தெரியவந்துள்ளது.
@reuters
அந்த ஒப்பந்தத்தின் நோக்கம் நிறைவேறவில்லை என்றே ரஷ்யா குற்றஞ்சாட்டிவருவதுடன், தங்களின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கட்டாயப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், உக்ரைன் தானியங்களுக்கு பதிலாக, ஆப்பிரிக்க நாடுகளுக்கு வணிக ரீதியாகவும் இலவசமாகவும் தானியங்களை அளிக்க ரஷ்யா தயார் நிலையில் இருப்பதாக ஜனாதிபதி புடின் அறிவித்துள்ளார்.
ஜூன் 2022 வரையில் ஆபிரிக்காவிற்கு அதிக அளவில் கோதுமை சப்ளை செய்யும் நாடுகளில் ரஷ்யா இருந்தது. 6 மாதங்களில் மட்டும் 10.8 மில்லியன் டன் கோதுமையை ஆப்பிரிக்காவுக்கு ரஷ்யா ஏற்றுமதி செய்துள்ளது.
ஆப்பிரிக்காவுக்கு தானியங்களை அனுப்ப
இதே காலகட்டத்தில் 6.3 மில்லியன் டன் கோதுமையை மட்டுமே உக்ரைன் ஆப்பிரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. மேலும், ரஷ்யா இந்த ஆண்டு இதுவரை இல்லாத சாதனை விளைச்சலை எதிர்பார்க்கிறது என்று புடின் கூறியுள்ளார்.
@afp
மட்டுமின்றி, இந்த வார இறுதியில் இரண்டாவது ரஷ்யா-ஆப்பிரிக்கா உச்சிமாநாட்டை ரஷ்யா நடத்தவுள்ளது. உக்ரைன் தானிய ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததன் காரணமாக உணவு விலை அதிகரிப்பால் ஆப்பிரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கட்டார் மற்றும் துருக்கி இணைந்துள்ள திட்டத்தினூடாக ஆப்பிரிக்காவுக்கு தானியங்களை அனுப்ப ரஷ்யா முயன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ரஷ்யாவின் இந்த திட்டத்திற்கு துருக்கியும் கட்டாரும் ஒப்புக்கொள்ளுமா என்பது சந்தேகமே என கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |