பின்வாங்கும் ரஷ்ய படைகள்…எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள்: உளவுத்துறை முக்கிய தகவல்
தெற்கு பகுதியில் இருந்து படைகளை திரும்ப பெறுவது குறித்து ரஷ்யா ஆலோசனை.
1000 மீ அகலமுள்ள ஆற்றின் குறுக்கே கடப்பதே சவாலானது என தகவல்.
உக்ரைனின் தெற்கு பகுதியில் இருந்து படைகளை திரும்ப பெறுவது குறித்து ரஷ்யா தீவிரமாக பரிசீலித்து வருவதாக பிரித்தானிய பாதுகாப்பு உளவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து பிரித்தானிய பாதுகாப்பு உளவுத்துறை தினசரி போர் நிலவரங்களை வழங்கி வருகிறது.
அந்த வகையில் இன்று பிரித்தானிய உளவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனின் தெற்கு பகுதிகளில் இருந்து ரஷ்யா தனது படைகளை திரும்ப பெறுவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளது.
Latest Defence Intelligence update on the situation in Ukraine - 20 October 2022
— Ministry of Defence ?? (@DefenceHQ) October 20, 2022
Find out more about the UK government's response: https://t.co/LeQsOOjVXy
?? #StandWithUkraine ?? pic.twitter.com/rHzlFrXAJU
அதிலும் டினிப்ரோ ஆற்றின்(Dnipro river) மேற்குப் பகுதிகளில் இருந்து தங்கள் படைகளை வெளியேற்றுவது குறித்து ரஷ்ய அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளது.
ஆனால் ரஷ்ய படைகளின் வாபஸ் நடவடிக்கையில் முக்கிய சவாலானது, அனைத்து துருப்புகளையும் அவரது உபகரணங்களையும் 1000 மீ அகலமுள்ள ஆற்றின் குறுக்கே கடக்க செய்வதாகும் என பிரித்தானிய உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
AFP/Getty Images
கூடுதல் செய்திகளுக்கு; இஸ்ரேல் தலைநகர் இனி ஜெருசலேம் இல்லை: அங்கீகரிப்பை கைவிடும் அவுஸ்திரேலியா
ஏனென்றால் அனைத்து நிரந்தர பாலங்களும் கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில் சமீபத்திய நாட்களில் கெர்சன் நகர் அருகே கட்டி முடிக்கப்பட்ட தற்காலிக கல் பாலம் மற்றும் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டு இருக்கும் பான்டூன் படகுப் பிரிவுகளையே ரஷ்யா பெரிதும் நம்பி இருப்பதாக தெரியவந்துள்ளது.