உக்ரைனின் தாக்குதலை முறியடித்த ரஷ்ய படைகள்!
கீவ்வின் ட்ரோன் தாக்குதலை ரஷ்ய ஆயுதப்படைகள் முறியடித்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ட்ரோன் தாக்குதல்
செவஸ்டோபோல் (Sevastopol) அருகே உள்ள வசதிகளை தாக்க உக்ரேனிய படைகள் ட்ரோன் தாக்குதல் நடத்தின.
ஆனால், உக்ரைனின் இந்த முயற்சியை ரஷ்ய இராணுவம் முறியடித்துள்ளது. இரண்டு UAVகள் வான் பாதுகாப்பு அமைப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்டன மற்றும் 5 ட்ரோன்கள் இலக்கை எட்டாமல் நொறுங்கி மின்னணுப் போர் மூலம் கட்டுப்படுத்தப்பட்டன என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Press service of the Ministry of Defense of the Russian Federation / TASS
அறிக்கை வெளியீடு
இதுதொடர்பாக ஆளுநர் Mikhail Razvozhayev வெளியிட்ட அறிக்கையில், 'செவஸ்டோபோல் நகருக்கு அருகில் உள்ள கிரிமியன் தீபகற்பத்தின் பிரதேசத்தில் உள்ள வசதிகள் மீது ஏழு ஆளில்லா வான்வழி வாகனங்கள் மற்றும் இரண்டு நீர் மேற்பரப்பு ட்ரோன்கள் மூலம் பயங்கரவாத தாக்குதலை நடத்த கீவ் ஆட்சியின் முயற்சி முறியடிக்கப்பட்டது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TASS
மேலும், தடுக்கப்பட்ட பயங்கரவாத தாக்குதலால் உயிர்ச்சேதமோ அல்லது சேதமோ ஏற்படவில்லை என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Stoyan Vasev/TASS
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |