உண்மையை பேசியதால் நீக்கப்பட்டேன்! வெளியான ரஷ்ய ராணுவ ஜெனரலின் சர்ச்சை ஆடியோ
உக்ரைன் போர் குறித்த உண்மையை பேசியதால் நான் என்னுடைய பதவியில் இருந்து நீக்கப்பட்டேன் என்று ரஷ்ய ராணுவ ஜெனரல் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போர்
உக்ரைன் ரஷ்யா போர் 500 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது, இதில் ரஷ்ய படைகள் நாளுக்கு நாள் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.
அப்படி இருக்கையில் உக்ரைனின் தெற்கு பகுதியில் 58வது ஒருங்கிணைந்த ஆயுதப்படையை வழிநடத்தி வந்த ரஷ்ய ராணுவ ஜெனரல் இவான் போபோவ் தன்னுடைய பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ரஷ்ய ராணுவத்தின் தலைமை மற்றும் உக்ரைனின் முன்வரிசையில் உள்ள மோசமான நிலைமை குறித்து பேசியதற்காக அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரஷ்ய ராணுவ ஜெனரல்
இந்நிலையில் இராணுவ மேஜர் இவான் போபோவ் (Ivan Popov) ரஷ்ய ராணுவ தலைமை குறித்து பேசிய ஆடியோ ஒன்றை ரஷ்ய சட்டமியற்றுபவர்கள் வெளியிட்டுள்ளனர்.
அதில் “தான் உண்மையை பேசியதால் பதவியில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாக ராணுவ மேஜர் இவான் போபோவ் தெரிவித்துள்ளார்.
ராய்ட்டர்ஸ் தகவல்படி, ரஷ்யாவின் உயர்மட்ட அதிகாரிகளின் தவறினால் ரஷ்ய ராணுவ வீரர்கள் முதுகில் குத்தப்பட்டுள்ளனர் என மேஜர் இவான் போபோவ் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளது.
AP
இது தொடர்பான ஆடியோவில், உக்ரைன் ராணுவத்தால் தங்களுடைய முன்வரிசையை உடைக்க முடியவில்லை, ஆனால் எங்கள் உயர் அதிகாரிகள் எங்களை பின்னால் இருந்து குத்தினார்கள். மேலும் போரின் இக்கட்டான நேரத்தில் என்னை பதவியில் இருந்து நீக்கினர் என்று மேஜர் ஜெனரல் இவான் போபோவ் பேசியுள்ளார்.
மேஜர் இவான் போபோவ் பதவி நீக்கம் செய்யப்பட்ட இரண்டு வாரங்களுக்கு பிறகு இந்த சர்ச்சை ஆடியோ வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |