காதல் தோல்விக்கு பிறகு…பெண்களை தேடி தேடி வேட்டையாடிய கொரியாவின் ரைன்கோட் சீரியல் கில்லர்
தென் கொரியாவில் சீரியல் கில்லர் ஒருவர் தனக்கு ஏற்பட்ட காதல் தோல்விக்கு பிறகு பாலியல் தொழிலாளர்களை சுத்தியல் கொண்டு அடித்து கொன்றுள்ளார்.
ரைன்கோட் சீரியல் கில்லர்
தென் கொரியாவின் யூ யங்-சுல்(Yoo Young-chul) என்ற நபர், செல்வந்தர்கள் மற்றும் பெண் பாலியல் தொழிலாளர் என கிட்டத்தட்ட 26 பேரை அடித்துக் கொண்டுள்ளார்.
பெண் பாலியல் தொழிலாளிகளை கொல்வதற்கு முன்னதாக பணக்கார தம்பதிகளை ரைன்கோட் கில்லர் என்று அழைக்கப்பட்ட யூ யங்-சுல் என்ற நபர் சுத்தியல் கொண்டு அடித்து கொன்றுள்ளார்.
Getty Images
அவரது காதலி அவரை ஏமாற்றிய பிறகே யூ யங்-சுல் மசாஜ் பார்லர்கள் மற்றும் பெண் பாலியல் தொழிலாளிகளை குறித்து வைத்து சுத்தியால் அடித்து கொலை செய்ய தொடங்கியுள்ளார்.
1988 முதல் 1998 வரையிலான காலகட்டங்களில் யூ யங்-சுல் மிக நீண்ட குற்ற வரலாற்றை கொண்டு இருந்தார். ஆனால் 2000 ஆண்டில் தான் முதல் முறையாக 15 வயது சிறுமியை கற்பழித்த குற்றத்திற்காக யூ யங்-சுல் சிறையில் அடைக்கப்பட்டார்.
Getty Images
சிறையில் அடைக்கப்பட்டு இருந்த போது பணக்காரர்களை குறித்து கொலை செய்த கொரிய சீரியல் கொலைகாரர் ஜியோங் டு-யோங் மீது பற்றுக் கொண்டுள்ளார். மேலும் அவரை பின் தொடர்ந்து பணக்காரர்களை குறி வைத்து சுத்தியால் அடித்து கொலை செய்ய தொடங்கியுள்ளார்.
இவரது குற்ற பின்னணி அறிந்த பிறகு முன்னாள் மனைவி, மசாஜ் நிலைய தொழிலாளி மற்றும் அவரது காதலி அவரை விட்டுச் செல்லவே அவருக்கு பெண்கள் மீதான வெறுப்பு ஏற்பட்டு மசாஜ் நிலைய பெண்கள் மற்றும் பெண் பாலியல் தொழிலாளிகளை கொலை செய்ய தொடங்கியுள்ளார்.
Getty Images
இவ்வாறு தொடர் கொலைகளை யோ செய்ய தொடங்கிய நிலையில், இறுதியாக பாதிக்கப்பட்டு இருந்த மசாஜ் நிலைய பெண் ஒருவரை அவர் தொலைபேசி மூலம் வெளியே அழைத்து இருந்தார்.
இதனை வைத்து மசாஜ் நிலைய உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் பொலிஸார் யூ யங்-சுல்-ஐ கைது செய்தார்.
நீதிபதியை தாக்கிய யூ யங்-சுல்
2004ல் யூ யங்-சுல்-லின் சீரியல் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில், யூ யங்-சுல் மூன்று நீதிபதிகளை தாக்க முயற்சித்தார்.
Getty Images
மேலும் சிறையில் தற்கொலை முயற்சியும் மேற்கொண்டார். இதையடுத்து அவருக்கு வழக்கறிஞர்கள் மரணத் தண்டனை விதிக்குமாறு கேட்டுக் கொண்டனர், இதற்கு யூ யங்-சுல் நன்றியும் கேட்டுக் கொண்டார்.
ஆனால் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர், இது சரியான முடிவு இல்லை, என்னை போன்றவர்கள் உயிருடன் இருப்பது நல்லது அல்ல என்று யூ யங்-சுல் எதிர்ப்பு தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |