செயற்கைக்கோள்கள் மூலம் ஐரோப்பாவின் GPS சிக்னல்களை முடக்கும் ரஷ்யா
ரஷ்ய செயற்கைக்கோள்கள் ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளுக்கான ஜிபிஎஸ்(GPS) சிக்னல்களை முடக்குவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
விண்வெளியில் சண்டை செய்யும் ரஷ்யா
டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வறிக்கையில், ரஷ்யா தங்களது செயற்கைகோள்களை பயன்படுத்தி ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மின்னணு போர் முறை மூலம் வேண்டுமென்றே ஜிபிஎஸ்(GPS) சிக்னல்களை சிதைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வானொலி அலைவரிசைகளை இரைச்சல்களால்(Noise) நிரப்புவதன் மூலம், ஜிபிஎஸ்(GPS) சிக்னல்களில் இடையூறு ஏற்பட்டு கப்பல்கள் மற்றும் விமானங்கள் தங்கள் இருப்பிடத்தை சரியாக கணிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

ஜிபிஎஸ்(GPS) சிக்னல்களில் ஏற்படுத்தப்படும் இந்த இடையூறு காரணமாக நாட்டின் பாதுகாப்பு மற்றும் அன்றாட செயல்பாடுகளில் கூட பெரும் சிக்கல் ஏற்படும் அபாயம் இதனால் ஏற்பட்டுள்ளது.
வழக்கமான இராணுவ மோதலுக்கு மாற்றாக, ரஷ்யா டிஜிட்டல் மற்றும் விண்வெளி உள்கட்டமைப்புகளை குறிவைத்து புதிய மின்னணு போர் தாக்குதல் முறையை தொடங்கி இருப்பது உலக நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கிய பிறகு ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த ஜிபிஎஸ் தடங்கல்கள் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் ஐரோப்பிய அதிகாரிகள், ஜிபிஎஸ்(GPS) சிக்னல்களுக்கு செயற்கைக்கோள்களை மட்டும் நம்பி இருக்காமல், தரைவழி மாற்றுக் கருவிகளையும் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |