ரஷ்யாவில் குழந்தைகளை பெற்றெடுக்கும் மாணவிகளுக்கு புதிய ஊக்கத்தொகை திட்டம்
ரஷ்யாவின் கரேலியா (Karelia) பிரதேசம், மக்கள்தொகை வளர்ச்சியை ஊக்குவிக்க புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
25 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு ஆரோக்கியமான குழந்தையைப் பிறப்பிக்க 1,00,000 ரூபிள் (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ. 288,000) ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்திற்கு தகுதியானவராக கருத, விண்ணப்பதாரிகள் கரேலியாவில் வசிப்பவராகவும், 25 வயதிற்குள் உள்ளவராகவும், முழுநேர பல்கலைக்கழக மாணவியாக இருக்க வேண்டும்.
குழந்தை இறந்து பிறந்தால் அப்பெண்கள் போனஸ் பெற தகுதியற்றவர்களாவர்.
குழந்தை பிறந்த பின்பு சிட்ஸ் (SIDS) நோய் காரணமாக இறந்தால் இந்த தொகை வழங்கப்படுமா என்பதைப்பற்றி தெளிவில்லை.
அதேபோல, உடல்திறன் குறைவுடன் பிறக்கும் குழந்தைகளுக்கான சலுகைகள் பற்றியும் திட்டத்தில் விரிவான தகவல்கள் இல்லை.
2024-ஆம் ஆண்டின் முதல் அரைவாசியில் ரஷ்யாவில் 5,99,600 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளனர். இது, கடந்த 25 ஆண்டுகளில் மிகக் குறைந்த பிறப்புகளை அடையாளப்படுத்துகிறது. 2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 16,000 பிறப்புகள் குறைந்துள்ளன.
தொகை உயர்வு மற்றும் பிற திட்டங்கள்
ரஷ்ய தேசிய அரசு, மகப்பேறு நலன்களை உயர்த்தியுள்ளது. முதல் குழந்தைக்கு, 2025-ஆம் ஆண்டு முதல் 677,000 ரூபிள் மற்றும் இரண்டாவது குழந்தைக்கு 894,000 ரூபிள் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
ரஷ்யாவின் மக்கள்தொகை பிரச்சினை
ரஷ்யாவில் மக்கள் தொகை குறைவு பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. இது குடியேற்றம், அதிக மரண விகிதம், குறைந்த பிறப்பு வீதம் ஆகியவற்றால் ஏற்பட்டு இருக்கிறது. உக்ரைன் போரும் மக்கள் தொகை குறைவுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
இதனை சமாளிக்க பல மாநிலங்களில் பொருளாதார ஊக்கத்தொகைகள் மற்றும் வீட்டுத்தொகை உதவிகள் தொடங்கப்பட்டாலும், இதுவரை கணிசமான பலன்கள் இல்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Russia Birth Rate, Russia Death rate, Russia kaleria Region