கடும் கட்டுப்பாடுகளை மீறி... கப்பல் கப்பலாக: வடகொரியாவின் கோரிக்கையை நிறைவேற்றிய ரஷ்யா
உக்ரைன் போரில் இராணுவ உதவி அளிக்கும் வடகொரியாவுக்கு கப்பல் கப்பலாக எண்ணெய் ஏற்றுமதி செய்யும் ரஷ்யா தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
எண்ணெய் ஏற்றுமதி
கடந்த 8 மாதங்களில் மட்டும் வடகொரியாவுக்கு 43 முறையாக மில்லியன் பீப்பாய்களுக்கும் அதிகமான அளவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்துள்ளது ரஷ்யா.
ஆயுதங்கள் மற்றும் இராணுவத்தினரை உக்ரைனுக்கு எதிராக களமிறக்கும் வடகொரியாவுக்கு கூலியாக ரஷ்யா எண்ணெய் வழங்குவதாக முன்னணி வெளிவிவகார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆனால் வடகொரியாவுக்கான இந்த ஏற்றுமதி ஐக்கிய நாடுகள் மன்றம் விதித்துள்ள தடைகளுக்கு எதிரான செயல் என்றே கூறப்படுகிறது. உலகில் எந்த நாடும் வடகொரியாவுக்கு எண்ணெய் விற்பதை தடை செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 500,000 பீப்பாய் சுத்தீகரிக்கப்பட்ட பெட்ரோல் மட்டுமே வடகொரியாவுக்கு வாங்கும் அனுமதி உள்ளது. மட்டுமின்றி, எஞ்சிய நாடுகள் போன்று வெளிப்படையாக சந்தையில் இருந்து வாங்கும் அனுமதியும் இல்லை.
இந்த நிலையிலேயே மார்ச் 7ம் திகதி முதல் இந்த 8 மாதங்களில் 43 முறை ரஷ்ய எண்ணெய் கப்பல்கள் வடகொரியாவுக்கு சென்றுள்ளது. கடைசியாக நவம்பர் 5ம் திகதி கப்பல் ஒன்று வடகொரியாவுக்கு சென்றுள்ளது.
16,000 கப்பல் கொள்கலன்கள்
இராணுவம் மற்றும் ஆயுதங்களுக்கு பதிலாக ரஷ்யாவிடம் இருந்து கப்பல் கப்பலாக எண்ணெய் வாங்கிக் குவிக்கும் வடகொரியா, பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மெல்ல மீண்டெழும் என்றும் நிபுணர்களால் கணிக்கப்படுகிறது.
வடகொரியாவில் 9 மில்லியன் பீப்பாய் எண்ணெய் தேவைப்படும் நிலையில், ஆண்டுக்கு 500,000 பீப்பாய்கள் மட்டுமே வாங்க அனுமதி இருப்பதால், சட்டவிரோத குழுக்களிடம் இருந்து தங்களுக்குத் தேவையான எண்ணெயை வடகொரியா வாங்கி வந்துள்ளது.
தற்போது ரஷ்யாவுடன் நெருக்கம் ஏற்பட்டதன் பின்னர், உக்ரைன் போருக்கு இராணுவம் மற்றும் ஆயுதங்களை வடகொரியா வழங்கி வருவதால், பதிலுக்கு ரஷ்யா எண்ணெய் வழங்குகிறது.
வெளியான தரவுகளின் அடிப்படையில், பீரங்கி குண்டுகள் மற்றும் ராக்கெட்டுகளால் நிரப்பப்பட்ட 16,000 கப்பல் கொள்கலன்கள் வடகொரியா இதுவரை ரஷ்யாவுக்கு அனுப்பியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |