உக்ரைன் மீது பாய்ந்த 4500 ஏவுகணைகள்: ரஷ்ய கீதம் ஒலிப்பது இதைவிட ஆபத்தானது
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை ரஷ்யா சுமார் 4500 ஏவுகணை தாக்குதலை நடத்தி உள்ளது.
நமது நிலத்தில் எதிர்களின் தேசிய கிதம் ஒலிப்பது, நமது வானில் ஏவுகணைகள் பறப்பதை விட ஆபத்தானது.
உக்ரைன் மீதான போர் தாக்குதல் தொடங்கியதில் இருந்து இதுவரை 4500 ஏவுகணைகளை ரஷ்யா உக்ரைன் மீது ஏவி இருப்பதாக அந்த நாட்டின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 24ம் திகதி தொடங்கிய உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல், எட்டு மாதங்களை கடந்தும் தீர்வு எதுவும் கிடைக்கப் பெறாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
INCREDIBLE ZELENSKY ADDRESS TONIGHT Day 247 ?
— ?UKRAINE DIARY LIVE Day 247?????????? (@UkraineDiary) October 28, 2022
President in the dark standing next to Iran Shahed 136 suicide drone
Slava Ukraine Slava Zelensky ?????????????? pic.twitter.com/HoaeoC2SQA
இந்நிலையில் உக்ரைனிய மக்களுடனான தனது வழக்கமான இரவு நேர காணொளி உரையில் வீழ்த்தப்பட்ட ஈரானிய ட்ரோன்களின் முன்பு நின்று பேசிய உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை ரஷ்யா சுமார் 4500 ஏவுகணை தாக்குதலை நடத்தி உள்ளது, அத்துடன் 8000க்கும் அதிகமான விமான தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது என தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு தினங்களில் மட்டும் 30 மேற்பட்ட ஆளில்லா விமானங்களை ரஷ்யா உக்ரைன் மீது ஏவி இருப்பதாக குற்றம்சாட்டியதுடன், நாங்கள் தொடர்ந்து போராடுகிறோம், இன்னும் அதிகமானவற்றை சுட்டு வீழ்த்துவோம் என தெரிவித்துள்ளார்.
உக்ரைனிய சக்தி நிலையங்கள் மீது ரஷ்யா நடத்தி வரும் பரந்த தாக்குதல் உக்ரைனியர்களின் நம்பிக்கைகளை சிதைக்காது, அதைப்போல ஏவுகணை தாக்குதல்களும் உக்ரைனியர்களை உடைக்காது.
மேலும் நமது நிலத்தில் எதிர்களின் தேசிய கிதம் ஒலிப்பது, நமது வானில் ஏவுகணைகள் பறப்பதை விட ஆபத்தானது எனவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: மன்னர் சார்லஸ் உருவப்படம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் தயார்: நுட்பமான வடிவமைப்பில் தயாரிப்பு
ரஷ்யா கடந்த இரண்டு வாரங்களில் உக்ரைனின் மின்சாரம் உருவாக்கும் வலையமைப்பின் மீது நடத்திய டஜன் கணக்கான ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா வான்வழி தாக்குதல்கள், பெரும் சேதத்தை ஏற்படுத்தியது மற்றும் உக்ரைனின் முக்கிய பகுதிகளில் மின் தடைகளை ஏற்படுத்தியுள்ளது.