தானிய ஒப்பந்தம் ரத்து... உக்ரைனின் துறைமுக நகரம் மீது கோர முகம் காட்டும் ரஷ்யாவால் புதிய சிக்கல்
ஐக்கிய நாடுகள் மன்றத்துடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட உக்ரைன் தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா வலுக்கட்டாயமாக வெளியேறிய நிலையில், தற்போது முக்கிய துறைமுக நகரம் மீது தொடர் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
தானிய ஏற்றுமதிக்கு மட்டும் ஒப்புதல்
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்புக்கு பின்னர், கருங்கடல் வழியாக உலக நாடுகளுக்கு தானிய ஏற்றுமதிக்கு மட்டும் ஒப்புதல் அளித்தது. அதுவும் ஐக்கிய நாடுகள் மன்றம் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் தலையீட்டினால் ஒப்பந்தம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.
@getty
ஆனால், தமது நிலை நெருக்கடியில் சிக்க, தற்போது உக்ரைனுக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில், அந்த ஒப்பந்தத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேறியுள்ளது.
இதனையடுத்து, முன்னர் தாக்குதல் தொடுப்பதில்லை என உறுதி அளித்திருந்த ஒடேசா துறைமுக நகரம் மீது தொடர் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. கடந்த ஒரு வாரகாலமாக ரஷ்யா முன்னெடுத்துவரும் தாக்குதல் காரணமாக ஒருபகுதியில் மட்டும் சேமிக்கப்பட்டிருந்த சுமார் 60,000 டன் தானியங்கள் சேதமடைந்துள்ளது.
@bbc
போர் தொடங்கிய முதல் மூன்று மாதங்கள், தானியம் மற்றும் எண்ணெய் ஏற்றுமதி தடைபட்டதால், உலக சந்தையில் 50 சதவீத விலை உயர்வு ஏற்பட்டது. தற்போது அதே சூழல் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
50 சதவீதம் வரையில் சரிய வாய்ப்பு
தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா வெளியேறிய ஒரு நாளுக்குள் உலக சந்தையில் தானிய விலை 8 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், கருங்கடலின் பெரும்பாலான பகுதி ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருப்பதால், உக்ரைனின் தானிய ஏற்றுமதி 50 சதவீதம் வரையில் சரிய வாய்ப்புள்ளது.
மட்டுமின்றி, 120,000 டன் வரையில் சேமிக்க போதுமான கிடங்கு ஒன்று தற்போது ஏற்றுமதி தடையால், நிரம்பி வருவதாகவும் கூறுகின்றனர். சாலை மற்றும் ரயில் வழியாக அண்டை நாடுகளான ரோமானியா மற்றும் போலந்துக்கு தானியங்களை அனுப்பி வைத்தனர்.
@getty
ஆனால் ஒருகட்டத்தில் அந்த நாடுகளில் உக்ரைன் தானியங்கள் காரணமாக உள்ளூர் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனிடையே, டான்யூப் நதி ஊடாக மத்திய ஐரோப்பாவுக்கு 12 மாதங்களில் 2 மில்லியன் டன் தானியங்கள் அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |