மான் மோதியதில் ரஷ்ய மொடல் பரிதாப மரணம்! நான்கே மாதங்களில் முடிந்த திருமண வாழ்க்கை
ரஷ்யாவைச் சேர்ந்த இளம் பெண் மொடல் மான் மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
செனியா அலெக்ஸாண்ட்ரோவா
2017ஆம் ஆண்டில் பிரபஞ்ச அழகிப் போட்டியில் ரஷ்யாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர் செனியா அலெக்ஸாண்ட்ரோவா (Kseniya Alexandrova).
30 வயதான இவர் இலியா என்பவரை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.
சமீபத்தில் செனியா தன் கணவருடன் காரில் சென்றுகொண்டிருந்தபோது Elk வகை மான் ஒன்று மோதியுள்ளது.
இதில் காரின் கண்ணாடி உடைந்து தாக்கப்பட்டதால் செனியா படுகாயமடைந்தார்.
உயிர் தப்பிய கணவர்
மேலும் மூளையில் ஏற்பட்ட தாக்கத்தால் செனியா கோமா நிலைக்கு சென்றார். அவரது கணவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
அவர், மானுடைய கால் தனது மனைவியின் தலையில் மோதியதால் அவர் படுகாயமடைந்ததாக தெரிவித்தார்.
இந்த நிலையில், கோமாவில் இருந்த செனியா அலெக்ஸாண்ட்ரோவா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது இறப்பு குறித்த அறிக்கைகள் வெளியானதைத் தொடர்ந்து அஞ்சலிகள் குவியத் தொடங்கின.
Miss Universe அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், செனியாவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோருக்கு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |