நள்ளிரவில் உக்ரைன் தலைநகர் மீது தாக்குதல் நடத்திய ரஷ்யா: தொடரும் பதற்றம்
உக்ரைன் தலைநகரான கிய்வ் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில், அந்நகர் பெரும் சேதமடைந்துள்ளது.
ரஷ்யா உக்ரைன் போர்
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே, கடந்த சில ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இப்போரில் ரஷ்யா பாக்முட் நகரை கைப்பற்றியுள்ளது.
ரஷ்யா தனது அடுத்த இலக்காக உக்ரைனின் தலைநகரான கிய்வ் நகரை சூறையாடி வருகிறது. இதனிடையே நேற்று நள்ளிரவில் திடீரென ட்ரோன் மூலமாக, ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
@@reuters
இந்த தாக்குதலில் கிய்வ் நகரின் முக்கிய பகுதிகள் உட்பட, கட்டிடங்கள் பெரிதும் சேதமடைந்திருப்பதாக, உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தில் மட்டும் 12வது முறையாக, ரஷ்யா கிய்வ் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக, கிய்வ் நகரின் அமைச்சர் அறிவித்துள்ளார்.
தொடர் தாக்குதல்
மேலும் அவர் தொடர்ந்து மூன்று மணி நேரம் நடத்தப்பட்ட எதிர்பாராத விதமான இந்த தாக்குதலில், கிய்வ் நகர் நிலை குலைந்து போனதென கூறியுள்ளார்.
இதனிடையே உக்ரைன் ராணுவ அலுவலகத்தின் தலைமை அதிகாரி ‘கிய்வ் நகர் மறுபடியும் வான்வெளி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது’ என தனது டெலிகிராம் பக்கத்தில் அறிக்கை விட்டுள்ளார்.
@reuters
மேலும் ‘இது பயங்கரமான தாக்குதல், எதிரிகள் தொடர்ந்து புது புது முறையில் ட்ரோன் தாக்குதல் நடத்துகின்றனர் எனவும், உக்ரைன் ராணுவத்தால் முடிந்தவரையில் ரஷ்யாவின் ட்ரோன்களை சுட்டு வீழ்த்த முடிந்துள்ளது' என உக்ரைன் ராணுவம் தகவல் அளித்துள்ளது.
ஈரானின் ட்ரோன்கள்
இந்த முறை ஈரான் நாட்டில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை, ரஷ்யா தாக்குதலுக்கு பயன்படுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
@reuters
மேலும் உக்ரைனின் மற்ற நகரங்களான கார்கிவ் மற்றும் செர்னிவிஸ்சி போன்ற நகரங்களும், ரஷ்யாவின் கொடும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.