அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்படுத்த ரஷ்யா சதி திட்டம்: உக்ரைன் பகிரங்க குற்றச்சாட்டு
ஜாபோரிஜியாவில் உள்ள அணுமின் நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்குள் போலியான அணுசக்தி சம்பவத்தை நிகழ்த்த ரஷ்யா திட்டமிட்டு வருவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் ஜாபோரிஜியா அணுமின் நிலையம்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை தொடங்கிய சில நாட்களிலேயே ஜாபோரிஜியாவில் உள்ள அணுமின் நிலையத்தை ரஷ்ய படைகள் சூழ்ந்து உலக அளவில் மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியது.
ஏனென்றால் ஜாபோரிஜியா அணுமின் நிலையமே ஐரோப்பாவில் உள்ள மிகப்பெரிய அணுமின் நிலையமாகும். இவை ரஷ்ய படைகளின் கீழ் சென்று விட்டால் ஏற்படும் மிகப்பெரிய விளைவுகள் குறித்த அச்சங்கள் பரவ தொடங்கியது.
Zaporizhzhia power plant in Ukraine. File pic
கடந்த பிப்ரவரி 24ம் திகதி இருநாடுகளுக்கு இடையிலான போர் தொடங்கிய நிலையில் கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் ரஷ்ய படைகள் ஜாபோரிஜியா அணுமின் நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
ரஷ்யா மீது குற்றச்சாட்டு
இரு நாடுகளுக்கிடையிலான போர் தொடங்கி 15 மாதங்களை கடந்து விட்ட நிலையில், ஜாபோரிஜியாவில் உள்ள அணுமின் நிலையத்தில் போலியான அணுசக்தி சம்பவத்தை நிகழ்த்த ரஷ்யா திட்டமிட்டு வருவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
Getty
இது தொடர்பாக உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், ரஷ்யர்கள் அணுமின் நிலையத்தில் விபத்து போன்ற ஒன்றை நிகழ்த்த திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தை உக்ரைன் மீது சுமத்தவும் குறிவைத்து வருகின்றனர் என தெரிவித்துள்ளது.
அத்துடன் சர்வதேச சமூகத்தின் விரிவான விசாரணையை தூண்டிவிட்டு ரஷ்ய படைகள் இந்தப் பகுதிகளில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர், இதன்மூலம் அவர்களது ஆக்கிரமிப்பு வீரர்களை மீண்டும் ஒருங்கிணைத்து உக்ரைனிய படைகளின் எதிர்ப்பு தாக்குதலை தடுக்க திட்டமிட்டுள்ளனர் என்று உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.