செர்னோபில் பேரழிவை விட மோசமான திட்டத்துடன் ரஷ்யா: கொடூர முகம் காட்டும் விளாடிமிர் புடின்
உக்ரைனில் தொழில்முறை இரசாயன ஆலையில் வெடிமருந்துகளை நிரப்பிய பின்னர், செர்னோபில் அணு உலையை விட மோசமான பேரழிவை ரஷ்யா சதி செய்யக்கூடும் என்று நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இராணுவ நிர்வாகம் எச்சரிக்கை
தொடர்புடைய ரசாயன ஆலையானது கிரிமியா பகுதியில் விஷம் கலந்த நீர்த்தேக்கத்தின் அருகாமையில் அமைந்துள்ளது என உள்ளூர் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், கெர்சன் பிராந்தியத்தின் இராணுவ நிர்வாகம் விடுத்துள்ள எச்சரிக்கையில்,
@getty
தொடர்புடைய ரசாயன ஆலை வெடிக்க வைக்கப்பட்டால், அது செர்னோபில் பேரழிவை விட மோசமானதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளனர். 2022 பிப்ரவரி மாத இறுதியில் உக்ரைன் மீதான படையெடுப்பை தொடங்கிய ரஷ்யா, அப்போதில் இருந்தே உள்கட்டமைப்புகள் அனைத்தையும் மிக மோசமாக சேதப்படுத்தி வருகிறது.
அரசு அலுவலகங்கள், குடியிருப்பு வளாகங்கள், தொழிற்சாலைகள், கிடங்குகள் என உக்ரைனை மீண்டு எழாதபடி சிதைத்துள்ளது. மட்டுமின்றி, சோவியத் காலகட்டத்தில் நிறுவப்பட்ட அணை ஒன்றை சேதப்படுத்தி திரைப்பட பாணியில் பல நகரங்களை, கிராமங்களை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது.
ஆனால் ரஷ்யா தரப்பில், இது உக்ரைனின் சதி எனவும், பழியை தங்கள் மீது சுமத்துவதாகவும் தெரிவித்துள்ளது. அணை சேதமடைந்து ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தங்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
@getty
ரசாயனம் காற்றில் கலக்கும்
உக்ரைன் தற்போது பதில் தாக்குதலுக்கு தயாராகி வரும் நிலையில், அதை எதிர்கொள்ள ரஷ்யா தொடர்புடைய ரசாயன ஆலையை வெடிக்க வைக்கும் என்றே அஞ்சப்படுகிறது.
கிரிமியாவில் அமைந்துள்ள அந்த ஆலையானது ஏற்கனவே கண்ணிவெடிகளாலும் ஆபத்தான ரசாயனங்களாலும் நிரப்பப்பட்டுள்ளது. உக்ரைன் ராணுவம் Dnieper நதியை கடந்து ரஷ்யாவுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதை அவர்கள் தெரிந்து வைத்திருப்பதால், அந்த ஆலையை வெடிக்க வைப்பதன் மூலமாக ராணுவ நடவடிக்கையை கட்டுப்படுத்தலாம் என ரஷ்யா தரப்பு திட்டமிடுகிறது.
Hulton Archive
அந்த ஆலையில் இருந்து பல ஆயிரக்கணக்கான டன் ரசாயனம் காற்றில் கலக்கும் என்றால், உண்மையில் செர்னோபில் அணு உலையை விட மோசமான பேரழிவை இது ஏற்படுத்தும் என்றே அஞ்சப்படுகிறது.