ரஷ்யாவும் அங்குள்ள மக்களும் தயாராகிவிட்டார்கள்... உண்மையை அம்பலப்படுத்திய ஜெலென்ஸ்கி
அணு ஆயுதங்களை பயன்படுத்துவது மிக ஆபத்தான விடயம். அது குறித்து பேசுவதும் ஆபத்தானது தான்
ரஷ்ய அதிகாரிகள் சமீப நாட்களாக அங்குள்ள மக்களை அணு ஆயுத பயன்பாடு தொடர்பில் தயார் படுத்தி வருகிறது
அணு ஆயுதம் பயன்படுத்தும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மேற்கத்திய நாடுகளிடம் உக்ரைன் ஜனாதிபதி முன்வைத்துள்ளார்.
ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினின் சமீபத்திய நகர்வுகளை கடுமையாக விமர்சித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, அணு ஆயுதம் பயன்படுத்துவது தொடர்பில் ரஷ்யா பேசி வருவது கண்டனத்துக்கு உரியது, மொத்த பூமிக்கும் இதனால் ஏற்படும் ஆபத்தினை உணர்ந்துகொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
ரஷ்ய அதிகாரிகள் சமீப நாட்களாக அங்குள்ள மக்களை அணு ஆயுத பயன்பாடு தொடர்பில் தயார் படுத்தி வருவதாக ஜெலென்ஸ்கி சுட்டிக்காட்டியுள்ளார். அணு ஆயுதங்களை பயன்படுத்துவது மிக ஆபத்தான விடயம். இருப்பினும் அதை பயன்படுத்தாமல் போனாலும், அது குறித்து தொடர்ந்து பேசுவதும் ஆபத்தானது தான் என்றார்.
மேலும், நேட்டோ நாடுகள் துரிதமாக செயல்பட்டு, அணு ஆயுத பயன்பாட்டில் இருந்து ரஷ்யாவை திசை திருப்ப வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். தேவையெனில் நேட்டோ நாடுகள் ரஷ்யா மீது தாக்குதல் முன்னெடுக்க வேண்டும் என ஜெலென்ஸ்கி முன்வைத்த கோரிக்கை கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
@getty
மேலும், ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தும் வரையில் காத்திருந்துவிட்டு, பின்னர் அணு ஆயுதங்களை பயன்படுத்திவிட்டார்கள், பதிலுக்கு நாங்களும் தாக்குதல் நடத்துவோம் என்பது வேண்டாம் என ஜெலென்ஸ்கி சுட்டிக்காட்டியுள்ளார்.