71 வயதிலும் பிட்டாக இருக்கும் புடின்! அவர் கடைபிடிக்கும் உடற்பயிற்சி, டயட் உங்களை ஆச்சரியப்படுத்தலாம்
பொதுவாக இரவில் கண்விழிப்பவர்களுக்கு குடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படும், உடலின் உயிரியல் கடிகாரம் மாறுபடும் என்பதால் அவர்களுக்கு சில நாட்களில் தலைவலி, வயிற்று உபாதைகள், உயர் ரத்த அழுத்தம், உடற்பருமன் என பல உடல்நல பிரச்சினைகள் ஏற்படும் என மருத்துவர்களை எச்சரிக்கின்றனர்.
அதிகாலை தூங்கச்செல்லும் பழக்கம்
ஆனால் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தினமும் இரவு இரண்டரை மணிக்கு மேல் தான் தூங்க செல்வாராம், காலை 9 அல்லது ஒன்பதரை மணிக்கு விழிப்பாராம். அப்படி இருப்பினும், 71 வயதிலும் அவர் ஃபிட்டாக இருக்கிறார். அவர் எப்படி இத்தனை வயதிலும் இவ்வளவு ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள அவரது ஒருநாள் உடற்பயிற்சி மற்றும் டயட் குறித்து தெரிந்துகொண்டால் போதும்.
முதலில் நீச்சல்
கிரெம்லின் மாளிகையில் காலை ஒன்பதரை மணிக்கு பொறுமையாகக் கண்விழிக்கும் புடின், முதலில் தனது ஆடம்பர நீச்சல் குளத்தில் வேக நீச்சல் போடுவாராம். பின்னர் உடற்பயிற்சிகூடத்திற்குச் சென்று வார்ம் அப் பயிற்சிகள் செய்வார். உடற்பயிற்சி செய்யும் அந்த நேரத்திலேயே செய்திகள் பார்த்து நாட்டு நடப்புகளைத் தெரிந்துகொள்வாராம்.
Michael Klimentyev | RIA Novosti | Kremlin | Reuters
புடின் டயட்
பின்னர் அமைச்சர்களுடன் காலை உணவருந்துவார். தனது டயட்டில் எப்போதும் கவனமாக இருக்கும் அவர், பெரும்பாலும் ஓட்ஸ் கஞ்சி, ஆம்லெட் உள்ளிட்ட முட்டை ரகங்கள், பிளாக் காஃபி, பழரசம் உள்ளிட்டவற்றை காலை உணவாக எடுத்துகொள்வாராம்.
பிறகு, அரசு ஆவணங்களை சில மணிநேரம் நோட்டமிட்டு அன்றைய நாளில் செய்யவேண்டிய வேலைகளைத் திட்டமிடுவார். அதனைத்தொடர்ந்து, ஒன்றரை மணியளவில் மதிய உணவருந்துவார்.
Mikhail Svetlov/Getty Images
நடந்தே செல்வார்
பின்னர், மதியம் மூன்றரை மணிக்கு தனது சொகுசு காரில் கிரெம்லின் மாளிகைக்கு செல்வார். கிரெம்லின் வாசலில் இறங்கி அங்கிருந்து அவரது கேபினுக்கு கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்வாராம். பாதுகாப்பு கருதி இந்தப் பாதை வளைந்து வளைந்து இருக்கும் என்றும் கேபினுக்கு புதிதாக வரும் யாரும் அவ்வளவு எளிதில் வழியைக் கண்டுபிடித்துவிட முடியாது. ஆனால் புடினுக்கு இந்த வழி மனப்பாடமாக தெரியும். பாதுகாப்புப் பணியாளர்களுக்கு வணக்கம் கூறியபடியே வேகமாக அந்த வழியில் நடந்து செல்வாராம்.
அலுவலக வேலைகளை மாலை 5 மணியளவில் தான் தொடங்குவாராம். இதனால், அலுவலக வேலைகள் முடிய இரவு 2 மணிக்குமேல் ஆகிவிடும் என்பதால் கேபினிலேயே இரவு உணவு எடுத்துக்கொள்வாராம்.
Alexsey Druginyn/AFP via Getty Images
ஜூடோ சாம்பியன்
பின்னர் தனது பங்களாவுக்கு காரில் சென்று, அதிகாலை 3 மணிக்கு படுக்கைக்கு செல்வார். மீண்டும் காலை 9.30 மாணிக்கு உற்சாகமாக எழுந்து தனது நாளை தொடங்குவார் புடின்.
புடின், முன்னாள் ஜூடோ சாம்பியன் என்பதால் அவ்வப்போது ஜூடோ தற்காப்புப் பயிற்சிகளும் மேற்கொள்வார்.
Mikhail Klimentyev/TASS
ரஷ்யாவின் அதிபராகவே தொடருவார்
71 வயதான போதிலும் புடின் தனது உடலை இவ்வளவு கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டிருப்பதால்தான் அவரால் உலகின் பாரிய அரசியல் தலைவர்களுள் ஒருவராக இன்றளவும் நீடிக்கிறார்.
அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட பல மேலை நாடுகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், இன்னும் பல ஆண்டுகளுக்கு தனது ஆட்சி கலையாமல் இருக்க ஏற்றவாறு ரஷ்ய அரசியலில் சட்ட திருத்தத்தையும் மேற்கொண்டு விட்டார். இனி அவரது வாழ்நாள் முழுவதும் ரஷ்யாவின் அதிபராகவே அவர் தொடருவார்.
Reuters