போலந்தைத் தொடர்ந்து மற்றொரு நாட்டில் அத்துமீறி ஊடுருவிய ட்ரோன்? ரஷ்யாவின் அதிரடி பதில்
தங்கள் நாட்டின் வான்வெளியில் ட்ரோன் ஒன்று அத்துமீறி நுழைந்ததாக ருமேனியா குற்றம்சாட்டியதற்கு ரஷ்யா பதில் அளித்துள்ளது.
அத்துமீறி நுழைந்த ட்ரோன்
உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, சமீபத்தில் போலந்து வான்வெளியில் ட்ரோன்களை அத்துமீறி செலுத்தியது.
இது ஐரோப்பிய நாடுகளுக்கு கவலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, வான்வெளியை பாதுகாப்பதற்கு உதவும் வகையில் போலந்திற்கு ரபேல் விமானங்களை பிரான்ஸ் அனுப்பி வைத்தது.
இந்த நிலையில், மற்றொரு ஐரோப்பிய நாடான ருமேனியாவும் தங்கள் நாட்டின் வான்வெளியில் ரஷ்ய ட்ரோன் அத்துமீறி நுழைந்ததாக குற்றம்சாட்டியது.
மேலும், இரண்டு F-16 போர் விமானங்கள் மூலம் ரேடாரில் இருந்து மறைவதற்கு முன்பு கண்காணித்ததாக ருமேனியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
அதே சமயம் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு மேல் ட்ரோன் பறக்கவில்லை மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இல்லை என்றும் கூறியது.
ஆத்திரமூட்டும் செயல்
இதுதொடர்பாக ரஷ்ய தூதர் விளாடிமிர் லிபாயோவை ருமேனியாவின் வெளியுறவு அமைச்சகம் வரவழைத்தது.
அதன் பின்னர் ருமேனிய வான்வெளியில் தங்கள் ட்ரோன்கள் நுழைந்ததை ரஷ்ய தூதரகம் மறுத்ததுடன், அது உக்ரைன் வேண்டுமென்றே செய்த ஆத்திரமூட்டும் செயல் என்று கூறியது.
மேலும் Burcharestயில் (ருமேனிய தலைநகர்) உள்ள அதிகாரிகள் வான் ஊடுவல் குறித்த ரஷ்யாவின் கேள்விகளுக்கு குறிப்பாகவும், உறுதியாகவும் பதிலளிக்க தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |