உக்ரைனில் மற்றோரு பெரிய இழப்பை உறுதிசெய்த ரஷ்யா
ஒரு பெரிய ரஷ்ய கப்பலின் கேப்டன் உக்ரைனில் நடந்த போரில் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரேனிய போரில் ஏற்பட்ட காயங்களால் கேப்டன் அலெக்சாண்டர் சிர்வா (Alexander Chirva) உயிரிழந்தார் என்று Sevastopol கவர்னர் மிகைல் ரஸ்வோஜாயேவ் கூறினார்.
ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையின் ஒரு பகுதியான சீசர் குனிகோவ் (Caesar Kunikov) என்ற பெரிய தரையிறங்கும் கப்பலின் தளபதியாக கேப்டன் சிர்வா இருந்தார்.
"அவரது தைரியம், தொழில்முறை மற்றும் அனுபவம் குழு உறுப்பினர்களின் உயிரைக் காப்பாற்றியது" என்று கேப்டன் சிர்வா மரணத்தின் சூழ்நிலைகளைப் பற்றி ரஸ்வோஜாயேவ் கூறினார்.
மார்ச் 24 அன்று உக்ரைன் நடத்திய தாக்குதலில் சீசர் குனிகோவ் கப்பல் சேதமடைந்ததாக செய்திகள் வந்தன, ஆனால் இந்த சம்பவத்தில் தான் கேப்டன் சிர்வா உயிரிழந்தாரா என்பது தெளிவாக தெரிவிக்கப்படவில்லை.
இரண்டு உக்ரேனிய நெப்டியூன் ஏவுகணைகளால் தாக்கப்பட்ட கருங்கடல் கடற்படையின் முதன்மைக் கப்பலான மாஸ்க்வா (Moskva) மூழ்கியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
3வது ரேங்க் கேப்டனான சிர்வா, கடற்படைக் குடும்பத்தைச் சேர்ந்தவர், அவ்ருக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார். அவரது தந்தை ஒரு கருங்கடல் கடற்படை தளபதி, மற்றும் அவரது சகோதரர் ரஷ்யாவின் தரைப்படையில் லெப்டினன்ட்-கர்னல் ஆவார்.
அவர் செவாஸ்டோபோலில் பிறந்தார், ரேடியோ எலக்ட்ரானிக்ஸ் கடற்படை நிறுவனத்தில் பட்டம் பெற்றார்.
2015 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில், அவர் சிரியாவில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்றார்.