மேற்கத்திய நாடுகளின் சதியால் FATF கருப்பு பட்டியலில் இணைந்தால்... இந்தியாவை அச்சுறுத்தும் ரஷ்யா
FATF என்ற அமைப்பின் தடை பட்டியலில் ரஷ்யா சேர்வதை தவிர்க்க உதவாவிட்டால், இந்தியா உட்பட மற்ற நாடுகளுடனான பாதுகாப்பு மற்றும் எரிசக்தி ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.
இந்தியா-ரஷ்யா உறவு
இந்தியா மற்றும் ரஷ்யா பல ஆண்டுகளாக சிறந்த நட்பு நாடுகளாக இருந்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின் முதல், இரு நாடுகளுக்கும் இடையே நட்பு வலுத்து வருகிறது.
@ap
மேலும் இரு நாட்டினரும் கூட்டமைத்து, ராணுவ ஆயுதங்களை பரிமாறி கொள்ளும் நிலையில் இணக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டு உக்ரைன் போர் துவங்கிய போது, மேற்கத்திய நாடுகள் முழுவதும் ரஷ்யாவிற்கு எதிராக திரும்பியதோடு, பொருளாதார தடைகளையும் விதிக்க துவங்கின. இதில் ரஷ்யா மற்றும் இந்தியாவுடனான உறவில் பெரிதாய் சிக்கல் உண்டாகவில்லை.
அச்சுறுத்தும் ரஷ்யா
இந்நிலையில் உக்ரைன் போரில் ரஷ்யா பல கண்டங்களுக்கு மத்தியிலும், தீவிரமாக ஈடுபட்டு வருவதால் மேற்கத்திய நாடுகள் இதற்கு ஒரு முடிவு கட்ட விரும்புகின்றன.
இதனால் மேற்கத்திய நாடுகள் ஒன்றாக இணைந்து, ரஷ்யாவை நிதி நடவடிக்கை குழுவின் FATF கருப்பு பட்டியலில் சேர்த்து பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்த முயற்சிக்கிறது. இது தொடர்பாக அச்சுறுத்தும் வகையில், இந்தியா உள்ளிட்ட பல நட்பு நாடுகளிடம் ரஷ்யா உதவி கேட்டுள்ளது.
@business today
புளூம்பெர்க்கின் அறிக்கைப்படி FATF அமைப்பின் தடை பட்டியலில், ரஷ்யா சேர்வதை எதிர்த்து குரல் கொடுக்காவிட்டால், இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளில் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி ஒப்பந்தங்கள் தடை செய்யப்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.
இந்தியாவிற்கு சிக்கல்
மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்கா ரஷ்யாவை கருப்பு பட்டியலில் சேர்க்க, FATFக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
@PRESS POOL
அவ்வாறு FATF கருப்பு பட்டியலில் இந்தியா இணைந்தால், இந்தியாவிற்கு எரிபொருள் வழங்கும் ரோஸ் நெப்ட், நயாரா எனர்ஜி லிமிடேட் இடையேயான ஒத்துழைப்பு பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது.
மேலும் இந்தியாவுடனான ராணுவ ஆயுதங்கள் பரிமாற்ற ஒப்பந்தம் பெரிதும் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.