ஜெலென்ஸ்கி மனைவியின் பெயரில் ஆசையாய் வாங்கிய விடுமுறை இல்லம்: ஏலத்தில் விற்கும் ரஷ்யா
உக்ரைன் படையெடுப்பிற்கு மேலும் நிதியளிக்க கருங்கடலில் உள்ள ஜெலென்ஸ்கியின் விடுமுறையின் இல்லத்தை ரஷ்யா விற்கவுள்ளது.
ஜெலென்ஸ்கியின் விடுமுறை இல்லம்
கிரிமியாவில் உள்ள உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் விடுமுறை இல்லம் தேசியமயமாக்கப்பட்டு உக்ரைன் படையெடுப்பிற்கு நிதியளிக்கும் வகையில் விற்கப்படும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரேனிய பகுதியாக இருந்த கிரிமியா 2014-ல் ஆக்கிரமிக்கப்பட்டு சட்டவிரோதமாக ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டது. கிரெம்ளின் கட்டுப்பாட்டின் இருக்கும் கிரிமியா பிராந்தியத்திற்கு பொம்மைத் தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டார்.
STR / UKRAINIAN PRESIDENTIAL PRESS SERVICE / AFP Légende
தேசியமயமாக்கப்படும் 57 சொத்துக்கள்
அவ்வாறு ரஷ்யாவால் தலைவராக நியமிக்கப்பட்ட கிரிமியா கவர்னர் செர்ஜி அக்ஸியோனோவ் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் உக்ரேனிய வணிகர்கள், உக்ரேனிய அதிபர்கள், பொது நபர்கள் மற்றும் மற்றும் வெளிநாட்டினருக்குச் சொந்தமான 57 சொத்துக்களை தேசியமயமாக்கும் முடிவை அவர் அறிவித்தார் .
தடைசெய்யப்பட்ட கிரிமியன் டாடர் பாராளுமன்றத்திற்கு சொந்தமான சிம்ஃபெரோபோலில் உள்ள கட்டிடம் மற்றும் உக்ரேனிய அதிபரின் மனைவி ஒலெனா ஜெலென்ஸ்காவின் அடுக்குமாடி குடியிருப்பு உட்பட பல சொத்துகளுக்கான உரிமைகளை கிரிமியா மீண்டும் பெறும் என அவர் அதில் கூறினார்.
Zelensky's luxury villa in Crimea Photo: min.news
ஜெலென்ஸ்கி ஆசையாய் வாங்கிய வீடு
வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குடும்பம் 2013-ல் கிரிமியாவில் உள்ள புகழ்பெற்ற கடலோர நகரமான லிவாடியாவில் மூன்று அறைகள் கொண்ட பென்ட்ஹவுஸ் அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியது. ஆனால், அடுத்தடுத்த புனரமைப்பு வேலைகள் மற்றும் அதைத் தொடர்ந்து ரஷ்யாவின் சட்டவிரோதமான ஆக்கிரமிப்பால், அந்த வீட்டிற்குள் அவரால் ஒருபோதும் செல்ல முடியவில்லை.
ரஷ்ய அரசு ஊடகத்தின்படி, அந்த சொத்தின் மதிப்பு சுமார் 800,000 அமெரிக்க டொலர் (ரூ. 24 கோடி) ஆகும்.
AFP
இப்போது இந்த அடுக்குமாடி குடியிருப்பு ஏலம் விடப்பட்டு, உக்ரைன் போரில் ரஷ்யாவின் செலவுகளுக்கு பயன்படுத்தப்படும் என கிரிமியா நாடாளுமன்றத்தின் சபாநாயகர் விளாடிமிர் கான்ஸ்டான்டினோவ் கூறினார்.
Photos: darik.news



