மரியுபோல் எக்கு ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் மக்கள்: வெளியான புதிய புகைப்படங்கள்
உக்ரைனில் இருந்து வெளியாகியுள்ள புதிய புகைப்படங்கள் மரியுபோல் எஃகு ஆலையிலிருந்து மக்களை வெளியேற்றும் முயற்சிகளைக் காட்டுகின்றன..
ஞாயிற்றுக்கிழமை, உக்ரைனில் உள்ள மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் எஃகு ஆலையில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். இது கடுமையான ரஷ்ய குண்டுவீச்சுக்கு உட்பட்ட பகுதியாகும்.
முதல் முறையாக, ஆலையில் இருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கான முக்கியமான மனிதாபிமான வழித்தடம் (Humanitarian Corridor) வேலை செய்யத் தொடங்கியது, அவர்கள் கடந்து செல்ல வழி வகுத்தது என்று உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை மாலை அறிவித்தார்.
ஆனால் அந்த வழித்தடம் குறுகிய காலமே நீடித்தது, இருப்பினும் ரஷ்ய ஷெல் தாக்குதல் மீண்டும் தீவிரமடைந்த நிலையில் மீட்பு முயற்சிகளை உக்ரைன் நிறுத்தியது என்று தேசிய காவலரின் 12 வது படைப்பிரிவின் தளபதி டெனிஸ் ஷ்லேகர் கூறினார்.
ஸ்டாலின் நிலைமை தான் இப்போது புடினுக்கு! சித்தப்பிரமை பிடித்துள்ளதாக முன்னாள் கேஜிபி முகவர் தகவல்
இந்த படங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறிது நேர வெளியேற்றத்தின் போது எடுக்கப்பட்டவை. அதிலும் அவை திங்கள்கிழமை தான் வெளியிடப்பட்டன.
இதனிடையே, மரியுபோல் நகர சபையின் டெலிகிராம் சேனலின்படி, மரியுபோலில் மீண்டும் செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் வெளியேற்றம் இருக்கும்.
இந்த ஒப்பந்தம் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் செஞ்சிலுவை சங்கத்தின் உதவியுடன் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று மரியுபோல் நகர சபை கூறியுள்ளது.
மரியுபோல் அசோவ்ஸ்டல் எஃகு ஆலையில் 5 ரஷ்யர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
[F4HTU ]
முன்னாள் மனைவியை மீண்டும் திருமணம் செய்ய ஆசைப்படும் பில் கேட்ஸ்!