உக்ரைன் மீது கொப்பளிக்கும் தீ மழை தாக்குதல்: பரபரப்பு வீடியோ!
உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள மரிங்கா பகுதியில் ரஷ்ய படைகள் தீ கொப்பளிக்கும் வெடி மருந்துகளை பயன்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.
உக்ரைனின் ரஷ்ய ஆதரவாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை உக்ரைனிடம் இருந்து விடுவிக்கும் விதமாக ரஷ்ய படைகள் பல மாதங்களாக முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன.
கிழக்கு உக்ரைனிய பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளை ஏற்கனவே ரஷ்ய படைகள் முழுவதுமாக தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து இருக்கும் நிலையில், தற்போது டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள மரிங்கா பகுதியில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
Occupiers use incendiary ammunition in #Marinka, #Donetsk region. pic.twitter.com/w4i7ae9fzA
— NEXTA (@nexta_tv) July 17, 2022
இந்தநிலையில், மரிங்கா பகுதியில் ரஷ்ய படைகள் மிகப் பயங்கரமான தீ கொப்பளிக்கும் வெடி மருந்துகளை பயனபடுத்தி தாக்குதல் நடத்தி இருப்பது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: பிரித்தானியாவில் அதிகரிக்கும் வெப்பம்: உடல் நலிவுற்றவர்களுக்கு அரசு எச்சரிக்கை!
இதனைத் தொடர்ந்து ரஷ்ய படைகளின் இந்த பயங்கர தாக்குதலுக்கு பல்வேறு உலக நாடுகளும் ரஷ்யாவிற்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றன.