உளவு பார்ப்பதற்காக 200,000 டொலர் மதிப்பிலான வீடு ஆசைகாட்டிய ரஷ்யா: ஒப்புக்கொண்ட உக்ரைனியரின் கதி
உக்ரைன் நாட்டவர் ஒருவர் ரஷ்யாவுக்காக உளவு பார்த்துவந்த நிலையில், அவருக்கு 200,000 டொலர் மதிப்பிலான அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றை வழங்குவதாக ரஷ்யா வாக்களித்துள்ளது.
ரஷ்யாவுக்காக உளவு பார்த்துவந்த உக்ரைனியர்
உக்ரைன் நாட்டவர் ஒருவர், உக்ரைன் நகரமான ஒடிஷாவிலுள்ள பாதுகாப்புப் படைகள் குறித்து ரஷ்யப் படைகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
மேலும், உக்ரைன் கடற்படை கருங்கடலில் போர்ப்பயிற்சி மேற்கொள்வதைக் குறித்தும் தகவலை லீக் செய்துள்ளார் அவர்.
Sky News
அவரது தகவல்கள் பயனுள்ளவையாக அமையும் பட்சத்தில், அவருக்கு கிரீமியாவில் 200,000 டொலர் மதிப்பிலான அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றை வழங்குவதாக ரஷ்யா வாக்களித்துள்ளது.
கையும் களவுமாக சிக்கிய உளவாளி
ஆனால், அந்த நபர் உளவுபார்க்கும் வேலையில் ஈடுபட்டிருந்தபோது, ஒடிஷாவில் உக்ரைன் பாதுகாப்புப் படையினர் அவரை கையும் களவுமாக பிடித்துள்ளார்கள்.
Sky News
200,000 டொலர் மதிப்பிலான அடுக்குமாடிக் குடியிருப்பு கிடைக்கும் என்ற ஆசையிலிருந்த அந்த நபருக்கு தற்போது உக்ரைனில் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.