உக்ரைனுக்காக ரூ 4,200 நன்கொடை... 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற பெண்
உக்ரைனை ஆதரிக்கும் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு பணத்தை நன்கொடையாக வழங்கியதாக குறிப்பிட்டு கைதான ரஷ்ய பெண் ஒருவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தேசத்துரோக குற்றவாளி
உக்ரைனை ஆதரிக்கும் ஒரு நிறுவனத்திற்கு நன்கொடை அளித்துள்ளதால் அவர் தேசத்துரோக குற்றவாளி என்று கண்டறியப்பட்டார். ரஷ்ய - அமெரிக்கரான Ksenia Karelina என்பவரே தேசத்துரோக வழக்கில் சிக்கியுள்ளவர்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் குடியிருப்பாளரான இவர் ரஷ்யாவில் வைத்தே கைது செய்யப்பட்டு, யூரல்ஸ் நகர நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொண்டார். இதே நீதிமன்றத்தில் தான் Wall Street Journal பத்திரிகையாளர் Evan Gershkovich என்பவர் கடந்த ஜூலை மாதம் உளவு செய்ததாக தண்டிக்கப்பட்டார்.
Ksenia Karelina வழக்கில் அதிகாரிகள் முன்னெடுத்த விசாரணையில், 2022 பிப்ரவரி 24ம் திகதி, உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த முதல் நாள், இவர் உக்ரைன் ஆதரவு தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை அளித்துள்ளதாக உறுதி செய்துள்ளனர்.
நியூயார்க்கில் அமைந்துள்ள Razom என்ற தொண்டு நிறுவனத்திற்கு 51 டொலர் தொகையை Ksenia Karelina நன்கொடையாக அளித்துள்ளார். அதாவது இந்திய மதிப்பில் ரூ 4200. இந்த தொண்டு நிறுவனமானது உக்ரைனில் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குகிறது.
குடும்பத்தினரை சந்திக்க
ஆனால், உக்ரைன் ராணுவத்திற்கு தங்கள் நிறுவனம் எவ்வித நிதியுதவியும் அளித்ததில்லை என்றே Razom விளக்கமளித்துள்ளது. வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரான 33 வயது Ksenia Karelina தீர்ப்பின் போது மிக அமைதியாகவே காணப்பட்டார்.
கடந்த வாரம் ரஷ்யாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்குமான கைதிகள் பரிமாற்றத்தில் இவர் பெயர் இடம்பெறவில்லை. ஆனால் அவரது சட்டத்தரணி தெரிவிக்கையில், அதுபோன்ற ஒரு கைதிகள் பரிமாற்றம் முன்னெடுக்கப்படும் போது கட்டாயம் இவர் பெயரும் இடம்பெறும் என குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவில் பிறந்த Ksenia Karelina கடந்த 2012ல் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்துள்ளார். 2021ல் அவருக்கு அமெரிக்க குடிமக்கள் அந்தஸ்தும் கிடைத்துள்ளது. இந்த நிலையில், ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்யாவில் உள்ள குடும்பத்தினரை சந்திக்கும் பொருட்டு, பயணப்பட்ட அவரை FSB கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |