வீடற்றவர்களை குறிவைக்கும் ரஷ்ய படைகள்: ஆள்சேர்ப்பு நடவடிக்கையில் புடின் தீவிரம்!
ரஷ்ய படைகளில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை தீவிரம்.
வீடற்ற நபர்களை ரஷ்ய இராணுவ ஆள்சேர்ப்பு அதிகாரிகள் குறிவைப்பதாக தகவல்.
உக்ரைனில் போரிடுவதற்கு ரஷ்ய ராணுவம் வீடற்ற மக்களை சுற்றி வளைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை குறைவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவராத நிலையில், உக்ரைனில் தங்களுடைய வெற்றி இலக்கை அடைவதில் ரஷ்ய படைகள் திணறி வருகின்றனர்.
மேலும் உக்ரைனில் தொடர்ந்து போர் புரிவதற்கான மனவளத்தை ரஷ்ய படைகள் இழந்து வருகின்றனர், ஏற்கனவே ரஷ்ய படைகள் கிட்டத்தட்ட 70,000 துருப்புகளை இழந்துள்ளனர்.
REUTERS
இந்தநிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், இழந்த துருப்புகளுக்கு பதிலாக தனது இராணுவத்திற்கு புதிய சக்திகளை கொடுக்கும் வகையில், சமீபத்தில் ரஷ்ய ஆயுதப்படைகளில் இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 1.15 மில்லியனுக்கும் அதிகமாக உயர்த்துவதற்கான ஆணையில் கையெழுத்திட்டார்.
அதனடிப்படையில் இராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு நடவடிக்கையில் குறைந்தபட்ச வயதை உயர்த்தியதுடன் மட்டுமில்லாமல், ரஷ்ய சிறைகளில் உள்ள மக்களையும் துருப்புகளில் இணைப்பது குறித்தும் திட்டமிட்டப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், ரஷ்ய ராணுவத்தில் துருப்புகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் நோக்கில், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு அதிகாரிகளிடம், வீடற்ற நபர்களை உக்ரைன் போரில் முதல்வரிசையில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இணைப்பதற்கான நடவடிக்கையை செயல்படுத்துமாறு புடின் உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில் பால்டிக் கடலில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் மத்திய மாவட்டத்தில் உள்ள வீடற்ற நபர்களை அதிகாரிகள் குறிவைத்துள்ளனர் என நோச்லெஷ்கா தொண்டு நிறுவனம் (Nochlezhka charity) தெரிவித்துள்ளது.
REUTERS
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள நகர நிர்வாகத்தின் அதிகாரிகள், உக்ரைன் போரில் உள்ளூர் வீடற்ற மக்களை இராணுவ ஆட்சேர்ப்பு செய்பவர்கள் பட்டியலிட முயன்றதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு: கொலம்பியாவில் பொலிஸார் மீது வெடிகுண்டு தாக்குதல்...8 அதிகாரிகள் பலி!
அத்துடன் புடினின் நெருங்கிய கூட்டாளியான Yevgeny Prigozhin, கிட்டத்தட்ட 1,000 கைதிகளை இராணுவத்தில் ஆட்சேர்ப்பு செய்துள்ளதாகவும், உக்ரைனுக்கு எதிரான மாஸ்கோவின் போரில் அவர்கள் போரிட்டால் அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வதாகவும் உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Getty Images/iStockphoto