உக்ரைனை பழிவாங்கிய ரஷ்யா! மீண்டும் ராக்கெட் தாக்குதல்: 10 வயது சிறுமி உட்பட நால்வர் பலி
உக்ரைனிய நகரான கிரிவி ரிஹ் மீது ரஷ்யா நடத்திய சமீபத்திய ஏவுகணை தாக்குதலில் 10 வயது சிறுமி உட்பட 4 பேர் உயிரிழந்து இருப்பதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா ஏவுகணை தாக்குதல்
உக்ரைனின் தெற்கு பகுதி நகரான கிரிவி ரிஹ்(Kryvyi Rih) மீது திங்கட்கிழமை ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 10 வயது சிறுமி மற்றும் அவரது தாயாருடன் சேர்த்து மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளனர்
. இது தொடர்பாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ள வீடியோவில், ஒன்பது மாடி கட்டிடத்தின் துளையில் இருந்து புகை வெளி வருவதையும், மற்றொரு கட்டிடம் முழுவதுமாக சிதைந்து கிடப்பதையும் பார்க்க முடிகிறது.
Monday morning. Regions of Ukraine are being shelled by the occupiers, who continue to terrorize peaceful cities and people. Kryvyi Rih, Kherson. Residential buildings, a university building, a crossroads were hit. Unfortunately, there are dead and wounded. There may be people… pic.twitter.com/goMVBbCN1B
— Володимир Зеленський (@ZelenskyyUa) July 31, 2023
இந்த தீவிரவாத போக்கு எங்களை அச்சுறுத்தவோ அல்லது சிதைக்கவோ செய்யாது என்றும், எங்களை மக்களை பாதுகாக்க நாங்கள் தொடர்ந்து உழைப்போம் என்றும் டெலிகிராமில் தெரிவித்துள்ளார்.
போருக்கு முன்பு 600,000 பேர் மக்கள் தொகை கொண்ட உலோக உற்பத்தி நகரத்தின் குடியிருப்பு மற்றும் பல்கலைக்கழக கட்டிடத்தின் மீது இந்த ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Rescue operation has been ongoing in Kryvyi Rih since the morning, after 2 rus ballistic missiles struck a house and a university.
— Defense of Ukraine (@DefenceU) July 31, 2023
The number of victims keeps growing. 5 bodies have already been discovered, including a 10 y.o. girl and her mother.
53 people were injured. pic.twitter.com/UnHF42wECd
43 பேர் படுகாயம்
இந்த ராக்கெட் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்து இருப்பதுடன் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் 200க்கும் மேற்பட்ட மீட்பு படையினர் ஈடுபட்டு வருவதாக உக்ரைனிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
43 பேர் இந்த தாக்குதலில் படுகாயமடைந்து இருப்பதாக அவசரகால சேவைகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது ஞாயிற்றுக்கிழமை உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இந்த ரஷ்யாவின் இந்த ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |