திருமணம் முடிக்க அண்டை நாடு, பின் புலம்பெயர்வு! ரஷ்ய புதுமணத்தம்பதிகள் கூறிய காரணம்
ரஷ்ய ஆண்கள், பெண்கள் ஐரோப்பா, தென் அமெரிக்கா அல்லது தென்கிழக்கு ஆசியாவில் திருமணத்திற்கு பின் குடியேறிய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் - ரஷ்யா போர்
உக்ரைன் மீதான போரினால் ரஷ்ய மக்களின் மனங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, திருமணத்திற்கு பின் ரஷ்யாவை விட்டு வெளியேற பலர் முடிவெடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
mostafa_meraji / pixabay
ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸி யெர்மோலேவ் (Alexei Yermolaev) என்பவர் தனது அன்னா வோல்ஷுவாவை கரம் பிடித்தார். போர் ஆரம்பித்து ஒரு வருடத்திற்கு பிறகு இவர்களின் திருமணம் ஜார்ஜியா நாட்டின் தலைநகர் திபிலிசியில் நடந்தது.
இதற்கு காரணம் திபிலிசி அதன் தளர்வான திருமண விதிமுறைகளால், தற்போது திருமணம் செய்துகொள்ளும் மையமாக மாறியுள்ளது. திருமணம் செய்துகொள்ள விரும்புபவர்கள் இங்கு வந்து பாஸ்போர்ட்டை வழங்கியவுடன், இரண்டு மணிநேரத்தில் திருமணம் செய்துகொள்ளலாம் என வோல்ஷுவா கூறுகிறார்.
Courtesy of Yekaterina Alexandrova
ரஷ்யாவில் இருந்து வெளியேறும் ஜோடிகள்
இவர்களைப் போல மாஸ்கோ டைம்ஸிடம் பேசிய ஆறு புதுமணத் தம்பதிகள் தென் காகசஸ் நாடுகளான ஜார்ஜியா, ஆர்மேனியா மற்றும் அஜர்பைஜானில் தங்களுக்கு அறிமுகமானவர்கள் , நண்பர்கள் இருப்பதாக கூறினர்.
சமூகவியல் நிபுணரான விளாடா பரனோவா, 'குடியேற்றத்தில், மக்கள் அதிக நிச்சயமற்ற சூழ்நிலையில் வாழ்கிறார்கள். எனவே அவர்கள் தொடர்ந்து செல்லக்கூடிய உறுதியான திட்டங்களை வகுக்க விரும்புகிறார்கள்' என தெரிவித்துள்ளார்.
இவர் கடந்த ஆண்டு ரஷ்யாவில் இருந்து ஆர்மேனியாவுக்கு தப்பிச்ச சென்ற பின், திபிலிசியில் திருமணம் செய்து கொண்டார். தற்போது பரனோவா பின்லாந்தில் வசித்து வருகிறார்.
Alexander Patrin / Kommersant
Courtesy of Yekaterina Alexandrova
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |