24 மணிநேரத்தில் 600 உக்ரேனிய துருப்புகள் அழிப்பு! ஒப்புக்கொண்ட ஜெலென்ஸ்கி
கடந்த 24 மணிநேரத்தில் 600க்கும் மேற்பட்ட உக்ரேனிய துருப்புகள் அழிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியதை வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒப்புக் கொண்டுள்ளார்.
600க்கும் மேற்பட்ட துருப்புகள்
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனின் எதிர்த்தாக்குதல் தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக, தனது துருப்புகள் முன்னணியில் கடினமான நேரத்தை எதிர்கொள்வதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
மேலும், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறும்போது, கடந்த 24 மணிநேரத்தில் 600க்கும் மேற்பட்ட உக்ரேனிய துருப்புகள் கொல்லப்பட்டுள்ளனர் என கூறியது.
இந்த நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றினை ஜனாதிபதி ஜெலென்ஸ்கி NBCக்கு அளித்த நேர்காணலில் ஒப்புக் கொண்டுள்ளார்.
ஜெலென்ஸ்கியின் அறிவுறுத்தல்
அத்துடன் நமது வீரர்களுக்கு மரியாதையை செலுத்த வேண்டும் என ஜெலென்ஸ்கி ட்வீட் செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'உக்ரைனில் உள்ள நாம் அனைவரும் நம் மக்களின் வாழ்க்கையையும், நமது சுதந்திரத்தையும் காக்க எழுந்து நின்றவர்களுக்கு நம் வாழ்வில் கடமைப்பட்டுள்ளோம் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
நமது வீரர்களையும், அவர்களது குடும்பங்களையும் மதிக்க வேண்டும், அதேபோல் அரசைக் காக்க எழுந்து கணவன்மார்கள் மற்றும் மனைவிமார்களையும் மரியாதை செய்வது அவசியம். கண்டிப்பாக இவர்களுக்கு நன்றி கூறுவது அவசியம். உக்ரைனுக்கு நன்றியுடன் இருப்பது எப்படி என்று தெரியும். இது ஒவ்வொரு நாளும் காட்டப்பட வேண்டும்' என கூறியுள்ளார்.
Always keep in mind that all of us in Ukraine owe our lives to those who stood up to defend the lives of our people and our independence. Respect for our warriors, respect for the families of our warriors, respect for the wives and husbands of all those who have stood up to… pic.twitter.com/KHqrkwdh4x
— Володимир Зеленський (@ZelenskyyUa) June 16, 2023
LAURENT VAN DER STOCKT/GETTY IMAGES
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |